நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மும்பை அணியும் சிறப்பாக தயார் செய்து வருகிறது. மும்பை அணி தங்களின் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது.
ஹர்திக் பாண்டியாவின் ஆசை
மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்று 5 ஆண்டுகள் கடந்துவிட்டது. இதனால் கடந்த சீசனிலேயே கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி கொண்டு வந்தது. ஆனால் புள்ளிப் பட்டியலில் மும்பை அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது. அதற்கு மும்பை அணியின் ரசிகர்களும் முக்கிய காரணம்.
ஏனென்றால் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு சதவிகிதம் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. அவர் வந்தாலே மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் எதிர்ப்பு கோஷத்தை எழுப்பினர். ஆனால் கடந்த ஓராண்டில் இந்திய அணி அடைந்த 2 ஐசிசி வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தார். இதனால் இம்முறை ஹர்திக் பாண்டியாவுக்கான எதிர்ப்புகள் இருக்காது என்று பார்க்கப்படுகிறது.
மும்பை ஜெர்சி
இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ஹர்திக் பாண்டியா பேசும் போது, நான் பேட்டிங் செய்ய களமிறங்கினால், ஆதரவாக கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்துங்கள். சிக்ஸ் அடித்தால் உற்சாகப்படுத்துங்கள், பவுலிங் செய்ய வந்தால் உற்சாகப்படுத்துங்கள்.. வான்கடே மைதானத்தில் நீள நிறத்தை தவிர வேறு ஜெர்சி நிறத்தை பார்க்கவே கூடாது. அதுதான் எனது ஆசை.
சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் மும்பை அணியை வழிநடத்துவார்.. நான் இல்லையென்றால் கேப்டன்சிக்கு அவரே சரியாக வீரர்.. இந்த டி20 வடிவம் அவரின் களம் என்று தெரிவித்தார். இம்முறை மும்பை அணியின் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ள சூழலில், அவரின் இடத்தை எந்த வீரர் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

