பொய் சொல்ல விரும்பல.. நாங்க தொடர்ந்து தோற்றத்துக்கு இந்தியாவும் ஒரு காரணம் தான்.. பகார் ஜமான் ஓபன் டாக்.!

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக மீண்டும் வெற்றியின் பாதைக்கு திரும்பி இருக்கிறது. இந்த வெற்றிக்கு பிறகு ஏழாவது இடத்தில் இருந்து புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு திரும்பி இருக்கிறது பாகிஸ்தான்.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆரிய பங்களாதேஷ் 24 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 32.2 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் பகார் ஜமான் அதிரடியாக விளையாடிய 73 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

நேற்றைய போட்டிக்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றியின் பாதைக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மேலும் இனிவரும் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம் எனவும் தெரிவித்தார். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி உடனான தோல்வி தங்களது அணியை மனதளவில் மிகவும் பாதித்ததாக குறிப்பிட்டு பேசியிருந்தார் அவர்.

- Advertisement -

இது தொடர்பாக பேசிய அவர் ” நிச்சயமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எப்போதுமே பரபரப்பு மற்றும் அதிக அழுத்தம் நிறைந்தது. அந்தப் போட்டியில் நாங்கள் அடைந்த தோல்வி எங்களை மிகவும் பாதித்தது. அந்தப் போட்டி எங்கள் அணிக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நான் கூறினால் அது உண்மையாக இருக்காது. எனினும் நாங்கள் அனைவரும் தொழில் முறை ஆட்டக்காரர்கள். நிச்சயமாக அந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” கடந்த இரண்டு போட்டிகளிலும் எங்களது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. மீதி இருக்கும் இரண்டு ஆட்டங்களிலும் எங்களது சிறந்த கேமை வெளிப்படுத்துவோம். உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டிக்கான எல்லாம் முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்” என தெரிவித்தார். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் இது போன்ற ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்வோம். கடந்த எட்டு ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறேன். நாங்கள் அதிகமான ஆட்டங்களில் விளையாடும் போது எங்களால் அதிக அளவு முன்னேற்றத்தை பெற முடியும்” என தெரிவித்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பையில் தனது மூன்றாவது போட்டியில் இந்திய அணியுடன் விளையாடியது. இந்தப் போட்டி கடந்த அக்டோபர் 14ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி 150 ரன்கள் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தான் அணியை 191 ரன்கள் சுருக்கினர். இந்திய அணி ரோகித் சர்மாவின் அதிரடியால் 31 ஒவர்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக பெற்ற மோசமான தோல்வி இதுவாகும்.

இந்தப் போட்டியை தொடர்ந்து அந்த அணி ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் மற்றும் சவுத் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வி கண்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியானது. இந்த உலகக் கோப்பையின் தொடக்கத்தில் கோப்பையை வெல்லும் அணியாக கருதப்பட்ட பாகிஸ்தான் தற்போது அரை இறுதிக்கு தகுதி பெறுமா என்பது சந்தேகத்தில் உள்ளது. இதற்கு இந்திய அணியுடன் தோல்வி ஒரு முக்கியமான காரணம் என பகார் ஜமான் தெரிவித்திருக்கிறார். அந்தப் போட்டி தங்களது தோல்வியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால் அது பொய்யாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles