ஜிம்பாப்வே போட்டியின் பாதியில்தான் இந்த விஷயத்தை முழுசா உணர்ந்தேன்.. எனக்கு நல்லா அது கை கொடுத்துச்சு – ஹர்திக் பாண்டியா பேட்டி

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த சூழ்நிலையில் இறுதிக்கட்டத்தில் களம் இறங்கி அரைசதம் அடித்து இந்திய அணியில் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய ஹார்த்திக் பாண்டியா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு நாங்கள் எப்படி மீண்டு வந்தோம் என்று சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “23 பந்தில் 50 ரன் என்பது மிகவும் நம்பிக்கையானதாக இருக்கிறது. பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது நான் பந்தை பலமாக அடிக்க முயற்சிக்கிறேன் என்று உணர்ந்தேன். பிறகுதான் நான் பந்தை நன்றாக டைம் செய்தாலும் என்னால் சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்று அதற்குத் தகுந்தவாறு விளையாடினேன் என்னுடைய பேட்டிங் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் நாங்கள் எல்லா விதமான போட்டிகளையும் பார்த்து வருகிறோம்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியை நாங்கள் பார்த்தோம். ஆனால் அதைவிட முக்கியம் நாங்கள் எங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து சிறப்பாக விளையாடியது மட்டுமே ஆகும். பந்து வீச்சிலும் இந்திய அணி நன்றாகவே செயல்படுகிறது. மேலும் என்னால் வந்த இரண்டு புறமும் ஸ்விங் செய்ய முடிகிறது. எனவே இதிலும் நான் திருப்தியாக இருக்கிறேன்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles