தோனிதான் ரியல் பாகுபலி.. அவர் வந்த உடனே இப்ப சிஎஸ்கே வேற லெவல்ல இருக்காங்க – ஹர்பஜன் சிங் பாராட்டு

லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று எம் எஸ் தோனி தலைமையில் தங்களது இரண்டாவது வெற்றியை சிஎஸ்கே பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே வின் எழுச்சி குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற சிஎஸ்கே அதற்கு அடுத்து ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்தது. இதற்கு இடையில் நான்காவது போட்டியின் போது காயம் அடைந்து அணியின் கேப்டன் ருத்ராஜ் வெளியேற, அவருக்கு பதிலாக மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்ற தோனி ஐந்தாவது போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஆறாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தனது அணியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

இது சிஎஸ்கே அணிக்கு தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி கொடுக்கும் வகையில் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனி கேப்டனானது குறித்து இந்திய மற்றும் சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் விரிவாக கூறும்போது “எம்எஸ் தோனி ஒரு உண்மையான பாகுபலி. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் தான் மேலே வந்தால் என்ன செய்ய முடியும் என்பதை உலகிற்கு காட்டிவிட்டார். ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்வது அவருக்கு பொருந்தவில்லை. லக்னோ அணிக்கு எதிராக தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை தோணி சிறப்பாக காட்டினார். இப்போதும் பேட்டிங் திறமையை வைத்திருக்கும் தோனி கேப்டனாகிய பிறகு சிஎஸ்கே அணியை வேறு விதமாக மாற்றி விட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க:ஐபிஎல் கப் வாங்கணும்னு கொஞ்சமாச்சும் சிஎஸ்கேக்கு ஆசை இருக்கா இல்லையா.. காயம் அடைந்த ருத்ராஜூக்கு பதிலா இந்த சின்ன பையனா.? கொதிப்பில் முன்னாள் வீரர்கள்

அவர் கேப்டன் ஆன பிறகு சிஎஸ்கே வேறு விதமாக தெரிகிறது. தோனியும் வித்தியாசமான முறையில் பேட்டிங் செய்தார். அவர் அடித்த 26 ரன்கள் லக்னோ அணியை அழுத்தத்தில் தள்ளியது. தோனி கேப்டனான பிறகு அவரது தலைமையில் சிஎஸ்கே சிறப்பாக விளையாடி வருகிறது எனவே வாழ்த்துக்கள் சிஎஸ்கே. அப்துல் சமாத்தை ரன் அவுட் செய்ததும் ஒரு விதமான அதிர்ஷ்டம்தான். தோனிக்கு எப்போதுமே அதிர்ஷ்டம் ஒரு படி மேலே இருக்கிறது. அது தோனி வந்தால் அனைத்துமே சாத்தியம்” என்று அவர் பேசியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles