ஐபிஎல் கப் வாங்கணும்னு கொஞ்சமாச்சும் சிஎஸ்கேக்கு ஆசை இருக்கா இல்லையா.. காயம் அடைந்த ருத்ராஜூக்கு பதிலா இந்த சின்ன பையனா.? கொதிப்பில் முன்னாள் வீரர்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியான ஐந்து தோல்விகளுக்குப் பிறகு லக்னோ அணிக்கு எதிராக இரண்டாவது வெற்றியை நேற்று முன்தினம் பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் காயம் அடைந்த சென்னை கேப்டனுக்கு பதிலாக மாற்று வீரர் குறித்து பல முன்னாள் இந்திய வீரர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இந்த முறை சிஎஸ்கே அணி மிகவும் பரிதாபமான நிலைமையில் இருக்கிறது. மெகா ஆக்ஷனிலேயே படு சொதப்பலான வீரர்களை எடுக்க அதற்கான விளைவுகளை தான் தற்போது சென்னை அணி சந்தித்து வருகிறது. மாறிவரும் டி20 கிரிக்கெட்க்கு ஏற்ப வீரர்களை எடுக்காமல் தரையோடு விளையாடக்கூடிய பெரும்பாலான வீரர்களை தேர்வு செய்து ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்தது. இந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில் அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியான தோல்வி சிஎஸ்கே சந்தித்து பெரிய அளவு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

- Advertisement -

கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்று சிஎஸ்கே இழந்த நிலையில் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார். ஏற்கனவே பவர் ஹிட்டர்கள் இல்லாமல் தடுமாறி வரும் சென்னை அணிக்கு மேலும் ஒரு பெரிய இழப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு பதிலாகவாவது சிஎஸ்கே ஒரு பெரிய வீரருக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் விதமாக சிஎஸ்கே கேப்டனுக்கு மாற்று வீரராக 17 வயது உள்நாட்டு தொடரில் விளையாடி வரும் ஆயுஷ் மாத்ரேயை தேர்வு செய்திருப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு வெளிநாட்டு பவர் ஹிட்டரை எடுத்து அணியை வலுப்படுத்தாமல் இந்தியாவுக்கே இன்னும் ஆடாத ஒரு சிறுவனை அணியில் எடுத்து அவருக்கு வாய்ப்பும் கொடுக்க மாட்டீர்கள், அவரை இந்த வருடம் முழுவதும் உட்கார வைப்பதால் என்ன பயன் சென்னை அணிக்கு வந்து விடப் போகிறது என்று இந்திய முன்னாள் வீரர்கள் மிகவும் யோ மகேஷ் மற்றும் சிஎஸ்கே முன்னாள் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த் தங்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க:ஃபினிஷர் தோனி.. கம்பீராக நின்ற சிவம் துபே.. சிஎஸ்கே எடுத்த புது ரூட்.. லக்னோவுக்கு சங்கு!

பல போட்டிகளுக்குப் பிறகு கடந்த போட்டியில் தான் சிஎஸ்கே ஒரு இளம் வீரரான ஷேக் ரசீதுக்கு வாய்ப்பு கொடுத்து விளையாட வைத்திருக்கிறது. ஒரு புதிய இளம் வீரரை அறிமுகப்படுத்தவே 7 போட்டிகள் ஆகியிருக்கும் நிலையில் கேப்டனுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட வீரருக்கு சிஎஸ்கே நிர்வாகம் எப்போது வாய்ப்பினை வழங்கும் என்று பலரும் தங்களது கேள்விகளை எழுப்புகிறார்கள். இந்த முறை கோப்பையை வெல்லும் கனவு சிஎஸ்கே அணிக்கு இருக்கிறதா? இல்லையா என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles