ஃபினிஷர் தோனி.. கம்பீராக நின்ற சிவம் துபே.. சிஎஸ்கே எடுத்த புது ரூட்.. லக்னோவுக்கு சங்கு!

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட 49 பந்துகளில் 63 ரன்களை விளாசியது.

- Advertisement -

ஷேக் ரஷீத் அசத்தல்

இதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் ஷேக் ரஷீத் – ரச்சின் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ரச்சின் – ஷேக் ரஷீத் இருவரும் அதிரடியாக ஆடிய நிலையில், பவுண்டரிகள் அடுத்தடுத்து விளாசப்பட்டது. இதனால் 5 ஓவர்களிலேயே சிஎஸ்கே அணி 50 ரன்களுக்கு மேல் குவித்தது. சிறப்பாக ஆடிய ரஷீத் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இதன்பின் ரச்சின் ரவீந்திரா – திரிபாதி இணை நிதானமாக விளையாட, லக்னோ அணியின் கைகள் ஓங்கியது. அப்போது சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 22 பந்துகளில் 37 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி 9 ரன்களிலும், ரவீந்திரா ஜடேஜா 7 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி தடுமாறியது.

- Advertisement -

ஃபினிஷர் தோனி

தொடர்ந்து சிவம் துபே நிதானமாக ரன்களை சேர்க்க, அப்போது வந்த விஜய் சங்கர் 9 ரன்களில் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் சிவம் துபே – தோனி கூட்டணி இணைந்தது. இதனால் கடைசி 30 பந்துகளில் 56 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது தோனி அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரியும் விளாசி தள்ளினார்.

இதனால் கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கே அணி வெற்றி பெற 24 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்கூர் வீசிய 19வது ஓவரில் 19 ரன்கள் விளாசப்பட, ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரின் 3வது பந்திலேயே பவுண்டரி விளாசி சிவம் துபே சிஎஸ்கே அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலமாக சிஎஸ்கே அணி 5 தோல்விக்கு பின் வெற்றியை பெற்றுள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles