அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 15ம் தேதிக்குள் நடக்க உள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள பல்வேறு அணிகளும், மினி ஏலத்தை விடவும் டிரேட் செய்யவே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே ராஜஸ்தான் அணியுடனான மோதல் காரணமாக சஞ்சு சாம்சன், அந்த அணியில் இருந்து ரிலீஸ் செய்யப்பட உள்ளார்.
சிஎஸ்கேவில் வாஷிங்டன் சுந்தர்
ஆனால் ரிலீஸ் செய்வதற்கு முன்பாகவே சஞ்சு சாம்சனை வாங்கிவிட வேண்டும் என்று சிஎஸ்கே, கேகேஆர், டெல்லி உள்ளிட்ட அணிகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் எந்த அணியாலும் ராஜஸ்தான் அணியின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் சஞ்சு சாம்சன் ஐபிஎல் மினி ஏலத்திற்கு வருவார் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் சிஎஸ்கே அணி சைலண்ட்டாக ஒரு பெரிய சம்பவத்தை செய்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரது இடத்தை நிரப்ப வாஷிங்டன் சுந்தரை அணுகி இருக்கிறது. ஆனால் வாஷிங்டன் சுந்தரை மொயின் அலியின் ரோலில் பயன்படுத்த சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
மாஸ்டர் மைண்ட் தோனி
அதாவது நம்பர் 3 பேட்ஸ்மேனாகவும், ஒரு ஆஃப் ஸ்பின்னராகவும் வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்த முடிவு எடுத்துள்ளது. ஆனால் வாஷிங்டன் சுந்தர் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி வசம் இருக்கிறார். அவர் ரூ.3.2 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தார். இதனால் வாஷிங்டன் சுந்தரை வாங்குவதிலும் சிஎஸ்கே அணிக்கு எந்த சிக்கலும் இல்லை. அதற்கு குஜராத் அணியும் ஒப்புதல் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் சேப்பாக்கம் மைதானத்தை நன்றாக அறிந்தவர். சிஎஸ்கே அணிக்காக இணையும் போது, வாஷிங்டன் சுந்தர் கூடுதல் உத்வேகம் அடைய அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் தோனி மீண்டும் ஒருமுறை தாம் ஒரு மாஸ்டர் மைண்ட் என்பதை நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

