சிஎஸ்கே இதை எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கு.. சேஸ் செய்யக்கூடிய இலக்கு தான் ஆனா.. தோல்விக்கான காரணத்தை விளக்கும் கில்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. தோல்விக்கான காரணம் குறித்து விளக்கி இருக்கிறார் கில்.

- Advertisement -

பேட்டிங்க்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி பவர் பிளேவின் மூலம் முதல் ஆறு ஓவர்களில் 60 ரன்களுக்கு மேல் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரச்சின் ரவீந்தரா இந்த போட்டியில் அபாரமாக விளையாடி 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் கெய்குவாட் 46 ரன்கள் குவித்த நிலையில் அவரும் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு மிடில் ஆர்டரில் களமிறங்கிய சிவம் துபே குஜராத் அணியின் பந்துவீச்சு நொறுக்கி விலாசினார். பவுன்சர் பந்துகளுக்கு எதிராக தனக்கு இருந்த குறையை நேற்றைய போட்டியில் நிவர்த்தி செய்தார். ஐந்து சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் மூலம் 51 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இவர்களின் அதிரடியால் சென்னை அணி 206 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கம் முதல் இறுதி கட்டம் வரை யாரும் பெரிய பங்களிப்பை அளிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கில் 8 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதிரடிக்கு பெயர் போன டேவிட் மில்லரும் 21 ரன்களில் ஆட்டம் இழக்க, தமிழக வீரர் சாய் சுதர்சன் மட்டுமே 37 ரன்கள் குவித்து ஆறுதல் படுத்தினார்.

இதன் மூலம் இறுதியில் 143 ரன்களே குஜராத் அணியால் குவிக்க முடிந்தது. இதனால் முதல் தோல்வியை பதிவு செய்துள்ள குஜராத் அணியின் கேப்டன் கில் தோல்விக்கான காரணத்தை கூறுகையில்
“நாங்கள் பேட்டிங் செய்யும்போது சென்னை அணி எங்களை விரைவாகவே ஆட்டமிழக்க செய்தது. பவர் பிளேயரில் நல்ல ஸ்கோரை பெற நாங்கள் நினைத்தோம். ஆனால் விரைவிலேயே விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் வேகமாக ரன்களை குவிக்க முடியவில்லை.

- Advertisement -

டி20 கிரிக்கெட் பொருத்தவரை 10 முதல் 15 ரன்கள் கூட மிகப் பெரிய தாக்கத்தினை உண்டுபடுத்தும். இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் சேஸ் பண்ண முடியும் என்று நாங்கள் நினைத்தோம். இந்தப் போட்டி பந்துவீச்சாளர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இவ்வாறான அனுபவங்கள் போட்டியின் பாதியில் அல்லது இறுதியில் பெறுவதை விட ஆரம்பத்திலேயே பெற்று விடுவது நல்லது.

இதை சென்னை அணியின் மூலம் நாங்கள் கற்றோம். புதிய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். குஜராத் அணியின் கேப்டனாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே அடுத்த போட்டியில் மீண்டு வந்து வெற்றி பெற முயற்சிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles