எங்க ஆஸ்திரேலியா டீம் அரையிறுதிக்கு வராது.. இந்த 4 டீம்தான் வரும்.. முன்னாள் வீரர்கள் அதிரடி கருத்து – ரசிகர்கள் ஆச்சரியம்

இந்த வாரம் இறுதியில் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரின் செமி பைனலுக்கு எந்த நான்கு அணிகள் வரும் என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் டேமியன் பிளம்மிங், கிளன் மெக்ராத் மற்றும் ஜேசன் கில்லஸ்பி மூவரும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதில் இருவர் தங்கள் சொந்த அணியான ஆஸ்திரேலியா செமி பைனலுக்கு தகுதி பெறாது என்று கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

டேமியன் பிளம்மிங் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் செமி பைனலுக்கு தகுதி பெறும் என்று கூறியிருக்கிறார். அதே சமயத்தில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் எனவும் அபிஷேக் சர்மா அதிக ரன்கள் எடுப்பார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

கிளன் மெக்ராத் தனது கணிப்பில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணியை தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர் தனது சொந்த அணியான ஆஸ்திரேலியாவை தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடுத்து ஜேசன் கில்லஸ்பி இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் தொடரை நடத்தும் இலங்கை அணியை தேர்ந்தெடுத்திருக்கிறார். இவரும் தனது சொந்த அணியான ஆஸ்திரேலியாவை தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles