விராட் கோலியுடன் பேசியதற்கு பிறகு இந்த மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.. ஆனால் எதுவுமே மாறவில்லை.. அஸ்வின் சேனலுக்கு பேட்டி அளித்த கம்பீர்

நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதைத் தொடர்ந்து இன்று நடைபெற உள்ள முதல் பிளே ஆஃப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் வலுவாக காணப்படும் கொல்கத்தா அணி அதைத் தாண்டி அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரும் பலமாக உள்ளது. இளம் திறமைகளை கண்டறிவதில் இருந்து அணியில் உள்ள பிரச்சனைகளை களைந்து வலுவாக மாற்றுவதில் கம்பீர் வல்லவர்.

- Advertisement -

அதிக வெற்றிகளை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், களத்தில் ஒழுக்க விதிமுறைகளை கடைபிடிக்கும் ஃபேர் பிளே பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் இருக்கிறது. பேர் பிளே என்பது அணியின் வெற்றி, தோல்வியைத் தாண்டி களத்தில் ஒரு அணி ஒழுக்கத்தில் எந்த அளவு சிறந்து விளங்குகிறதோ அந்த அணிக்கு போட்டிகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.

- Advertisement -

ஒவ்வொரு போட்டிக்கும் இவ்வளவு புள்ளிகள் என்று அளவுகோல் இருக்கும். தற்போது பேர் பிளே பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி, விராட் கோலியைக் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டியதன் மூலம், முதல் இடத்திற்கு செல்வோம் என நினைத்ததாக கொல்கத்தா அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வின் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
“சின்னச்சாமி மைதானத்தில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியுடன் நட்பு பாராட்டியதை தொடர்ந்து பேர் பிளே பட்டியலில் எங்களுக்கு முதலிடம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது போல பேர் பிளேவிலும் முதலிடம் பிடிப்போம் என்று நினைத்தேன்.

- Advertisement -

ஆனால் நாங்கள் கடைசி இடத்தில் இருக்கிறோம். எனக்கு ஒரு நண்பர் மெசேஜ் அனுப்பி இருந்தார். கேகேஆர் அணி எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ? அங்கு தான் உள்ளது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில், பேர் பிளேவில் கடைசி இடத்திலும் உள்ளது என்று கூறியிருந்தார். எனக்கு அதுதான் புரியவில்லை. நாங்கள் கடைசி ஐந்து ஆட்டங்கள் நன்றாகத்தான் விளையாடினோம். இருப்பினும் அந்த பிரிவில் நாங்கள் கடைசி இடத்தில் இருக்கிறோம்.

இதையும் படிங்க:இதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தேன்.. 10 வருடங்களுக்குப் பிறகு அதன் காரணத்தை விளக்கிய தோனி

இதற்குக் கேகேஆர் பெவிலியனில் நான் இருப்பதே காரணம் என்று நினைக்கிறேன். எனது பள்ளிப் பருவத்தில் இருந்தே நான் கடைசி பெஞ்ச் மாணவனாக இருந்துள்ளேன். அது தற்போது வரை தொடர்ந்து வருகிறது. நான் எந்த அணியுடன் இருந்தாலும் பேர் ப்ளே அவார்டில் எனக்கு கடைசி இடமே கிடைக்கிறது. முன்பு லக்னோ அணியுடன் இருந்த போது ஒன்பதாவது இடத்தில் லக்னோ இருந்தது. தற்போது கொல்கத்தா பத்தாவது இடத்தில் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles