ஐபிஎல் சீசன் திருவிழா மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற பத்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பெங்களூரு அணியில் இன்னிங்சை விராட் கோலி மற்றும் பாப் டு பிளஸ்சிஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இரண்டு போட்டியில் பெரிதும் ரன் குவிக்காத பாப் டு பிளஸ்சிஸ் ஆறு பந்துகளில் எட்டு ரன்கள் குவித்த நிலையில் ஹர்சித் ரானா பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
வழக்கம் போல விராட் கோலி ஒரு முனையில் நிலைத்து நின்று விட்டார். முதலில் ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாகவே காணப்பட்ட நிலையில், நேரம் செல்லச் செல்ல பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. இதற்குப் பின்னர் களம் இறங்கிய கேமரூன் கிரீன் 21 பந்துகளில் நான்கு பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் என்று குவித்து 21 பந்துகளில் 33 ரன்கள் குவித்த நிலையில் ரசலின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் தடுமாறிய மேக்ஸ்வெல் இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சற்று தடுமாறினார். அவர் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்பையும் கொல்கத்தா அணி வீரர்கள் தவறவிட, 19 பந்துகளில் 22 ரன்கள் குவித்த நிலையில் மேக்ஸ்வெல் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து பட்டிதார் மூன்று ரன்களில் வெளியேற, அனுஜ் ராவத் மூன்று ரன்களில் வெளியேறினார்.
பின்னர் இறுதி கட்டத்தில் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் எட்டே பந்துகளை சந்தித்து மூன்று சிக்சர்களை விளாசி 20 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் பெங்களூர் அணியின் ஸ்கோர் உயர உதவினார். 59 பந்துகளை சந்தித்த விராட் கோலி நான்கு பவுண்டரிகள் நான்கு சிக்சர்கள் உட்பட 83 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
போட்டி முடிந்து பெவிலியனை நோக்கி விராட் கோலி சென்று கொண்டிருக்கும்போது அப்போது எதிரரே வந்த கௌதம் கம்பீர் புன்னகையுடன் அவரைக் கட்டி அணைத்து சில வார்த்தைகள் கூறினார். அதற்கு விராட் கோலியும் சிரித்துக் கொண்டே புன்னகையுடன் பதில் அளித்த காட்சியை நம்மால் பார்க்க முடிந்தது. விராட் கோலிக்கும் கெளதம் கம்பிருக்கும் இடையே விரிசல், களத்தில் அவர்கள் இருவரும் பார்த்தால் மறைத்துக் கொள்வார்கள் என்று வதந்தி பரவிய நிலையில் அனைத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாய் அவர்களது சந்திப்பு முடிந்தது.
இதையும் படிக்கலாமே:தோனியின் வயதை விமர்சித்த சேவாக்.. 35க்கும் 41 க்கும் வித்தியாசம் இருக்கு.. கவாஸ்கர் தந்த பதிலடி.. கோபத்தில் ரசிகர்கள்
பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து இருக்கிறது. ஆடுகளம் பந்துவீச்சு சாதகமாக இருக்கும் நிலையில் கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்களுக்கு இது சற்று கடினமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
You won’t see action today💔
— 𝔸𝕪𝕒𝕒𝕟 (@Retired__hurt) March 29, 2024
Virat kohli & gautam gambhir 🤝 #RCBvsKKR #ViratKohli #GautamGambhir pic.twitter.com/IFZoEKMjeH

