தோனியின் வயதை விமர்சித்த சேவாக்.. 35க்கும் 41 க்கும் வித்தியாசம் இருக்கு.. கவாஸ்கர் தந்த பதிலடி.. கோபத்தில் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி இன்னமும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். 42 வயதாகியும் இந்த குதிரை இன்னமும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முடி சூடா மன்னனாக திகழ்பவர் மகேந்திர சிங் தோனி. நான்கு ஐபிஎல் கோப்பைகளை பெற்றுத் தந்த இவர் கடந்த வருடமும் இன்னும் ஒரு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துவிட்டு ஓய்வு பெறும் திட்டத்தில் தான் இருந்திருக்கிறார். ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தனது உடற்தகுதி ஒத்துழைத்தால் அடுத்த ஐபிஎல்லிலும் ஆடுவேன் என்று சென்ற வருடம் தெரிவித்தார்.

- Advertisement -

முன்னர் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஓய்வெடுத்து வந்த தோனி, கடந்த ஐபிஎல் தொடரைக் காட்டிலும் இந்த தொடரில் மிகவும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார். இதற்கு உதாரணம் சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் அணி வீரர் விஜய் சங்கர் பேட்டிங் செய்யும்போது சென்னை அணி வீரர் டாரி விச் மிச்சல் வீசிய பந்தை ஸ்ட்ரெயிட் ஆட முயற்சி செய்து பந்து விஜய் சங்கரின் பேட்டல் பட்டு பின்னால் வைடாக செல்ல அதை மகேந்திர சிங் தோனி அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் செய்தார்.

- Advertisement -

அவரின் இந்த அபாரமான கேட்ச் இளம் விக்கெட் கீப்பர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இவர் தற்போது இருக்கும் உடற்தகுதியை பார்த்தால் இன்னும் மூன்று ஐபிஎல் விளையாடுவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர். இந்த கேட்ச் குறித்து அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தோனியின் கேட்சை பாராட்டியும், அதே வேளையில் அவரின் வயதைக் குறிப்பிட்டு கிண்டலான ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து வீரந்தர் சேவாக் ஒரு கிரிக்கெட் நிகழ்ச்சியில் இந்திய முன்னாள் வீரர் ரோகன் கவாஸ்கரிடம் உரையாடும் பொழுது
“கேட்சுகள் போட்டிகளில் வெற்றி பெறுகின்றன. அஜிங்கியா ரகானேவும் ரச்சின் ரவீந்திராவும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஒரு அற்புதமான கேட்சை எடுத்தார்கள். அதேபோல வயதான தோனியும் ஒரு கேட்சை அற்புதமாக எடுத்தார்.

- Advertisement -

ரகானேவுக்கு வயதாகவில்லையா என் தோனியை மட்டும் குறிப்பிடுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கிறீர்கள். இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் உள்ளது. ரகானே தற்போது எம்.எஸ் தோனியை விட பிட்டாக தெரிகிறார். 35 வயதுக்கு 41 வயதிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தோனிக்கு இப்போது வயதாகிறது என்பது சந்தேகம் இல்லை” என்று கூறி இருக்கிறார்.

இதனைக் கேட்ட ரசிகர்கள் இன்னமும் தோனியால் களத்தில் 20 ஓவர்கள் கீப்பிங் செய்ய முடியும். பேட்டிங்கில் ரன்களை எடுத்து களத்தில் வேகமாக ஓட முடியும். அவர் இன்னமும் இரண்டு வருடங்கள் ஐபிஎல் விளையாடுவார் என்று விரேந்திர சேவாக்கின் கருத்துக்கு ரசிகர்கள் கோபமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles