இந்திய அணியின் அஸ்திவாரமே இவங்க 2 பேர்தான்.. இவங்கள தாண்டிட்டா போதும் தென்னாபிரிக்க அணி வெற்றி உறுதி – முன்னாள் தெ. ஆ வீரர் பேட்டி

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில் வருகிற 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியை எப்படி வீழ்த்த வேண்டும் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷான் பொல்லாக் சில முக்கிய விஷயங்களை கூறுத்தி இருக்கிறார்.

- Advertisement -

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணியும் சிறப்பான வெற்றிகளை பெற்று அடுத்த சுற்றில் இந்திய அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. மேலும் கடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. எனவே அதற்குப் பழி தீர்க்கும் விதமாக இந்த முறை இந்திய அணியை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் விளையாடும் தென்னாப்பிரிக்க அணிக்கு ஷாம் பல்லாக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்திய அணி வலுவான அணியாக உள்ளது. பேட்டிங் வரிசையை விட இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் இந்திய அணிக்கு மிகப்பெரிய தூண்களாக உள்ளனர். பும்ரா வித்தியாசமான ஆக்ஷனை கொண்டவர். மேலும் அவர் எந்த மாதிரியான பந்துவீச்சாளர் என்பது அனைவருக்குமே தெரியும். மேலும் வருண் சக்கரவர்த்தியும் மிஸ்டரி ஸ்பின்னர் என்பதால் இந்த இருவரையும் தென்னாப்பிரிக்க அணி சமாளிக்க வேண்டி வரும். இருவரையும் சமாளித்து விளையாடிவிட்டால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுவது யாராலும் தடுக்க முடியாது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles