பும்ராவின் அருமையை அவங்க டீமே இன்னும் முழுசா புரிஞ்சுக்கல.. எந்த கேப்டனுக்கும் கிடைக்காத மாய சக்தி அது – தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் புகழாரம்

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 253 ரன்கள் குவித்திருந்தாலும் சளைக்காமல் வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி இறுதியில் 7 ரன் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வி அடைந்தது.

- Advertisement -

ஒரு சமயத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்த்த நிலையில் பும்ராவின் இறுதிக்கட்ட பந்துவீச்சு இந்திய அணிக்கு பெரிய நம்பிக்கையை பெற்றுக் கொடுத்தது. மற்ற பவுலர்கள் அனைவருமே அடி வாங்கிய நிலையில் பும்ரா 4 ஓவர்களில் 33 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் பாப் டூ பிளஸ்சிஸ் கூறும்போது “பும்ரா போன்ற ஒருவர் அணியில் இருக்கும் போது இந்திய அணி எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு இன்னும் முழுமையாக புரியவில்லை என்று நான் நினைக்கிறேன். ஃபார்மட் எதுவாக இருந்தாலும் பும்ரா கையில் பந்தை கொடுத்தால் அவர் அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த கேப்டனும் கனவு காணும் அபூர்வ சக்தி அது இது ஒரு மாயவிளக்கை போன்றது. நீங்கள் அந்த விளக்கை தேய்த்தால் பும்ரா என்னும் ஜீனி வெளிப்பட்டு அவர் காரியத்தை முடித்துக் கொடுப்பார்” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles