இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆன விராட் கோலி டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளரான ஆலன் டொனால்ட் விராட் கோலி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிகவும் மிஸ் செய்வதாக பேசி இருக்கிறார்.
விராட் கோலி 2024 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். விராட் கோலிக்கு தேவையான உடல் தகுதி இருந்த போதிலும் அவர் ஓய்வு பெற்றது பலரிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இருப்பினும் அவருக்கும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் முன்னாள் தென்னாப்பிரிக்க பவுலர் ஆலன் டொனால்ட் கூறும்போது ” இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட் ஃபார்மேட்டை பொரறுத்தவரை விராட் கோலியை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். அவர் ஏபி டிவில்லியர்ஸ் போல வெகு சீக்கிரமாகவே ஓய்வு பெற்று விட்டார். இருப்பினும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். எனவே வருகிற ஒரு நாள் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவில் வைத்து அவர் விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம். மேலும் அவர் எஸ் ஏ டி20 கிரிக்கெட் லீகில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம்” என்று அவர் பேசி இருக்கிறார்.

