பிளேயர்ஸ் எல்லாருமே சுயநலமா இருந்தாங்க.. அதனாலதான் உலக கோப்பை ஜெயிக்கல.. ஆனால் ரோஹித் கதை வேற- நவ்ஜோத் சிங் பேட்டி

11 வருடங்கள் கழித்து இந்திய இனி மீண்டும் ஐசிசி கோப்பையை கைப்பற்றிய மகிழ்ச்சியில் வெற்றியை கொண்டாடி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தோனி மற்றும் கோலி தலைமையில் வீரர்கள் சுயநலமாக விளையாடியதாகவும், ரோகித் சர்மா தலைமையில் வீரர்களின் அணுகுமுறை குறித்தும் இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சிந்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

உலக கிரிக்கெட்டை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது ஆண்டு கொண்டிருந்தாலும் ஒரே ஒரு குறையாக இந்தியாவால் ஐசிசி தொடரை வெல்ல முடியாமல் போனது. 2013ம் ஆண்டு தோனி தலைமையில் கடைசியாக வாங்கிய சாம்பியன் டிராபி கோப்பைக்கு பிறகு 11 வருடங்கள் எந்த கோப்பையையும் இந்தியாவில் கைப்பற்ற முடியவில்லை.

- Advertisement -

இதற்கு நேர் எதிராக ஆஸ்திரேலிய அணி சில ஆண்டுகள் ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடிய விட்டாலும், அதற்குப் பிறகு கம்மின்ஸ் தலைமையில் மீண்டெழுந்து, மீண்டும் ஐசிசி கோப்பைகளை அடுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்த, அதற்கு தகுந்தவாறு இந்தியாவும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து மீண்டும் அந்த சோகத்தை பின் தொடர்ந்தது.

இந்த சூழ்நிலையில் தற்போது டி20 உலக கோப்பை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், அணியில் விளையாடிய வீரர்கள் முன்னர் சுயநலத்துடன் விளையாடியதாகவும், ரோஹித் சர்மா தலைமையில் தங்களின் இடத்தைப் பற்றி கவலைப்படாமல் ஆக்ரோஷமாக விளையாடியதாகவும் நவ்ஜோத் சிங் சிந்து வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது ” இந்திய கிரிக்கெட் அணியின் பலவீனத்தையே ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்று அதை பலமாக மாற்றி இருக்கிறார்.

- Advertisement -

இதற்கு முன்னர் விளையாடிய பெரும்பாலான இந்திய வீரர்கள் தங்கள் இடத்தை தக்க வைப்பதற்காக சுயநலத்தோடு விளையாடி வந்தார்கள். அவர்கள் தாங்கள் அணியில் இருக்க இதுபோன்ற விளையாடுவது அவசியம் என்று நினைத்தார்கள். கடந்த வருடம் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று இந்தியாவை சத்தம் இல்லாமல் ஆக்கியது. ரோகித் சர்மா தலைமையில் ஆன இந்திய அணி தங்கள் வரலாறை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

இதையும் படிங்க:தோனியை விட ரோஹித் பெஸ்ட் கேப்டனா?. இதுதான் இவங்க ரெண்டு பேருக்கும் வித்தியாசம்- தினேஷ் கார்த்திக் பேட்டி

இங்கு காலம் என்பது எல்லாவற்றையும் மாற்றக் கூடிய விஷயமாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சுயநலமல்லாமல் விளையாடியதற்காக இந்திய மக்களால் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய சிறந்த கேப்டனாக இருப்பார்” என்று நவ்ஜோத் சிங் சித்து வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles