தோனியை விட ரோஹித் பெஸ்ட் கேப்டனா?. இதுதான் இவங்க ரெண்டு பேருக்கும் வித்தியாசம்- தினேஷ் கார்த்திக் பேட்டி

இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா மகேந்திர சிங் தோனியை விட சிறந்தவரா? என்றும் இந்த இருவருக்கும் இடையேயான வித்தியாசம் குறித்து தினேஷ் கார்த்திக் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட் விளையாட துவங்கிய காலகட்டத்தில் இருந்து முதன்முறையாக 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் ஒரு நாள் உலகக் கோப்பையை இன்று வரலாறு படைத்தது. அதற்குப் பிறகு சரியாக 28 ஆண்டுகள் கழித்து மகேந்திர சிங் தோனி தலைமையில் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, அதற்கு முன்னர் 2007ம் ஆண்டு முதன் முதலில் துவங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையையும் வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

அப்படியே 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபி கோப்பையையும் கைப்பற்றி அனைத்து ஐசிசி தொடரையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை மகேந்திர சிங் தோனி பெற்றார். ஆனால் 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 11 வருடங்கள் எந்த கோப்பையையும் இந்தியா கைப்பற்றாத நிலையில் இறுதியாக ரோகித் சர்மா தலைமையில் இந்தியா டி20 உலக கோப்பையை வென்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா தோனியை விட சிறந்தவரா? என்றும், தோனி மற்றும் ரோஹித் இருவருக்கும் இடையேயான வித்தியாசம் குறித்தும் தினேஷ் கார்த்திக் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” ரோஹித் சர்மா சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனித்து அதன்படி முடிவை எடுக்கும் கேப்டன். ஆனால் மகேந்திர சிங் தோனி அப்படி அல்லாமல் தன் உள்ளுணர்வின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கக் கூடியவர்.

- Advertisement -

மேலும் விராட் கோலி ஒரு நெருப்பு மாதிரியான கேப்டனை போன்றவர். அவர் எப்போதும் எதிரணியின் முகத்துக்கு நேரே செயலாற்ற விரும்புபவர். ரோஹித் சர்மா தனது திட்டத்தில் தெளிவாக இருப்பார். அன்றைய நாளில் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதை வைத்துக்கொண்டு அதற்கேற்ற முடிவுகளை எடுத்து மாற்றக் கூடியவர். ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்றால் ரோஹித் சர்மா வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க:அந்த உலகக்கோப்பை தோல்வியால் தேம்பித் தேம்பி அழுதேன்.. அப்போதான் இந்த முடிவை எடுத்தேன்- கம்பீர் பேட்டி

அதனால்தான் பல வீரர்கள் அவரால் ஈர்க்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அவர் எப்போதும் எந்த சூழ்நிலையும் வீரர்களை கைவிடவில்லை.
இதனால்தான் ரோஹித் சர்மா சிறந்த வீரராக இருக்கிறா”ர் என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரோஹித் சர்மா அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன் கோப்பைகள் மீது அவர் கவனம் விருந்து இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களுக்கும் ரோகித் சர்மாவே கேப்டனாக தொடர்வார் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles