அந்த உலகக்கோப்பை தோல்வியால் தேம்பித் தேம்பி அழுதேன்.. அப்போதான் இந்த முடிவை எடுத்தேன்- கம்பீர் பேட்டி

இந்திய அணி டி20 உலக கோப்பை வென்று முடித்த கையோடு அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வு பெற இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்ச்சியாளராக கௌதம் கம்பீர் வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், கௌதம் கம்பீர் இந்திய அணியின் உலகக் கோப்பை தோல்வி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

2021ஆம் ஆண்டு ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பதவியேற்றார். அவரது தலைமையில் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியை தழுவிய நிலையில் தற்போது நடைபெற்ற டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று அந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்த டி20 உலக கோப்பையோடு தான் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக விரும்புவதாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணி அடுத்த பயிற்சியாளராக கம்பீர் வரவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கௌதம் கம்பீர், 1992ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி அடைந்த தோல்வி குறித்து சில முக்கிய கருத்துக்கள் கூறியிருக்கிறார்.

இது குறித்து கம்பீர் விரிவாக கூறும் பொழுது “1992ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இந்திய அணி அந்தப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த போட்டிக்கு முன்னரோ அல்லது அதற்குப் பிறகு நான் அதுவரை அப்படி அழுதது கிடையாது. அந்த தோல்விக்கு பிறகு தான் நான் ஒரு முடிவை எடுத்தேன்.

- Advertisement -

இந்திய அணிக்காக ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று. நான் நினைத்தவாறு 2011ம் ஆண்டு இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வென்றேன். 1992ம் ஆண்டு நான் முடிவெடுத்து அதனை 2011ம் ஆண்டு நிறைவேற்றினேன். ஆனால் அந்த போட்டிக்கு பிறகு நான் பெரிதும் மகிழ்ச்சியற்றவனாகவே வாழ்ந்தேன். ஆனால் நான் அந்தப் போட்டியின் தோல்வியால் தனிப்பட்ட முறையில் வேறு எதற்கும் நான் அப்படி அழுதது கிடையாது.

இதையும் படிங்க:இனி இவரை எதிர்க்க ஒரு ஆளுக்கு தைரியம் இருக்காது.. அப்படி ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார்- ராயுடு பேட்டி

உண்மையில் எனக்கு ரோல் மாடல் என்று நான் யாரையும் நினைத்ததும் இல்லை, யாரையும் பின் தொடர்ந்ததும் இல்லை. இதற்காக நான் மற்றவர்களால் விமர்சிக்கப்பட்டு இருக்கிறேன். என்னை பொறுத்தவரை நாம் நாமாக இருப்பதே நல்லது. ஒருவரை பின்தொடர்ந்து செல்வதால் நாம் நமது சுயத்தை இழக்கிறோம் என்பதில் உறுதியாக இருப்பேன். ஒருவர் யாருக்காவது பிடித்து விட்டால் அவரை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள். நான் அதுபோல யாரையும் பின்பற்றியது கிடையாது” என்று கம்பீர் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles