ஐபிஎல்லால் கிரிக்கெட் வியாபாரமாக மாறிவிட்டது.. யாரும் நாட்டுக்காக விளையாடுவதை விரும்புவதில்லை.. அப்ரிடி வருத்தம்

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறி இருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் கிரிக்கெட் வியாபாரமாக மாறிவிட்டதாகவும், இதற்கு இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் ஒரு முக்கிய காரணம் என்றும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பையில் பங்கு பெறுவதற்கு முன்னால் அதிரடியான மாற்றங்களை செய்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, செயலில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தாமல் லீக் சுற்றிலேயே இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களே பாகிஸ்தான் அணியை கடுமையாக சாடி வந்தனர். மேலும் வீரர்கள் தங்கள் நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாட மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

- Advertisement -

எடுத்துக்காட்டாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் இந்த தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி இருக்கும் நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் சம்பள பட்டியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருக்கிறார். மேலும் உலகம் முழுவதும் நடைபெற இருக்கிற டி20 லீக் தொடர்களில் கலந்து கொண்டு விளையாடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அப்ரிடி நிகழ்கால கிரிக்கெட் குறித்து கூறும் பொழுது ” தற்போது பணம் வந்தவுடன் அனைத்துமே மாறிவிட்டது. ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாட்டாக மட்டுமே பார்க்கப்பட்டது. தற்போது இது வியாபாரமாக மாறி உள்ளது. தற்போது பலர் பணத்தை வைத்து கிரிக்கெட்டை வணிகமயமாக மாற்றி இருக்கிறார்கள். இதனால் உலகில் பல்வேறு நாடுகளில் டி20 லீக்குகள் நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணமான மையப்புள்ளி ஐபிஎல்தான்.

- Advertisement -

உலகம் முழுவதும் லீக் தொடர்கள் உருவாக ஐபிஎல் தற்போது காரணமாக அமைந்திருக்கிறது. ஐபிஎல்லில் பணம் கோடி கோடியாக கொட்டுகிறது. ஒரு காலத்தில் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் போது பணம் கொடுப்பார்கள். ஆனால் அதற்கு ஆறு மாதம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும். அப்போதுதான் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இப்போது ஒவ்வொரு லீக்கிலும் பணம் கொட்டுவதால் வீரர்கள் தங்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட இதுபோன்ற லீக் தொடர்களில் விளையாடுவதை ஆர்வமாக வைத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:ஜூன் 20.. இந்திய கிரிக்கெட்டையே ஆட்டிப் படைத்த 3 ஜாம்பவான்கள்.. ஒரே தினத்தில் அறிமுகம்.. முழு விபரம்

ஆனால் இதன் மூலம் பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்களின் பணக்கஷ்டமும் இதன் மூலம் தீர்கிறது. வீரர்கள் தங்களது குடும்பங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். ஒருவகையில் இதுவும் ஒரு நல்ல விஷயம்தான்” என்று அப்ரிடி கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles