ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மேக்ஸ்வெல் திரும்பவும் 4 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான பார்த்திவ் பட்டேல் அவரை விமர்சித்தார்.
இதைத்தொடர்ந்து ஆர்சிபி ரசிகர்கள் பார்த்தி பட்டேலை கேலி செய்ததைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமூக வலைதளத்தில் ஒரு சம்பவம் செய்துள்ளார். இது தற்போது இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல் இந்த சீசனில் மிகவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மோசமான பார்மில் இருந்த அவர் சமீபத்தில் தனக்கு ஓய்வு தேவை என்று இரண்டு ஆட்டங்களில் அவர் ஆர்சிபி அணிக்காக விளையாடவில்லை. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் திரும்பவும் வாய்ப்பு பெற்றார்.
முதல் போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலையில் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. குஜராத் அணி நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை பெங்களூர் அணி துரத்திக் கொண்டிருந்தபோது ஐந்தாவதாக களமிறங்கிய மேக்ஸ்வெல் 3 பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே குவித்து திரும்பவும் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வீணடித்த மேக்ஸ்வெல் பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வரும் வேளையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் தனது சமூக வலைதளத்தில் “மேக்ஸ்வெல் ஒரு ஓவர்ரேட்டட் பிளேயர்” என்று குறிப்பிட்டார். அதாவது ஐபிஎல் மேக்ஸ்வெல்லை அதிகமாக கொண்டாடுகிறது என்று விமர்சித்தார். இதனைக் கண்ட ஆர்சிபி ரசிகர்கள் பார்த்தீவ் பட்டேலை அவரது உயரத்தை குறிப்பிட்டு கேலி செய்தனர்.
இதற்கு பார்த்தி வ் பட்டேல் பதிலடி கொடுக்கும் விதமாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது வெல்லப்பட்ட ஐபிஎல் கோப்பையை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதாவது பெங்களூர் அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை என்பதை மறைமுகமாக விமர்சித்திருந்தார். மேலும் மேக்ஸ்வெல் குறித்த தனது கருத்துக்கும் விரிவான விளக்கம் அதற்குப் பிறகு அளித்தார்.
இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியா மட்டுமல்ல.. மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு இவர்களும் ஒரு காரணம்தான்.. விமர்சிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்
அதாவது மேக்சில் “ஐபிஎல்லில் மட்டும் தான் ஓவர்ரேட் பிளேயர் என்றும், அவரை நான் சர்வதேசத் தரத்தில் ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டது கிடையாது” என்று கூறியிருக்கிறார். அவர் கூறியது போலவே மேக்ஸ்வெல் கடந்த சில வருடங்களில் ஐபிஎல்லில் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த கருத்துக்கு ஒரு தரப்பு ரசிகர்கள் ஆதரவும் ஒரு தரப்பு ரசிகர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
good night!!! pic.twitter.com/COQDNSijbm
— parthiv patel (@parthiv9) May 4, 2024

