ஆப்கானிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்வி பற்றி விசாரித்தேன்.. பாவம் சோகத்தில் அழுதுவிட்டார் இந்த இங்கிலாந்து வீரர் – வாசிம் அக்ரம் பேச்சு

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மிகப் பரபரப்பான போட்டியாக இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் மோதல் அமைந்தது. த்ரில்லர் போட்டியின் இறுதியில் ஆப்கானிஸ்தான் 8 ரன்களில் வென்று இங்கிலாந்து அணியை வெளியேற்றியது. இந்தத் தோல்வியால் மிகவும் மனமுடைந்து தன்னிடம் ஓர் இங்கிலாந்து வீரர் அழுததாக வாசிம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்கத்திலேயே சறுக்கல். 37/3 என தடுமாறிய போது ஜத்ரான் – சாஹிதி ஜோடி 103 ரன்கள் பர்ட்னர்ஷிப் அமைத்து அணியை நிலை நிறுத்தினர். சாஹிதி 40 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் ஓமர்சாய் ஓரளவு நின்று ஆடி 41 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இப்ராஹிம் ஜாத்ரான் மற்றும் நபி டாப் கியரில் ரன்களை குவித்தனர். தரமான ஓடிஐ ஆட்டத்தை வெளிக்காட்டிய ஜத்ரான் 177 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய நபி 40 ரன்கள் சேர்த்த நிலையில் ஆப்கானிஸ்தான் மொத்தத்தில் 325 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 8 ரன்கள் மிச்சத்தில் போட்டியைத் தழுவியது. பென் டக்கெட் 38, பரூக் 25, பட்லர் 38 எனத் நல்லத் துவக்கம் கிடைத்த போதிலும் அணியின் முக்கிய வீரர்கள் அதனைப் பெரிதாகக் கொண்டுச் செல்லவில்லை. இறுதிவரை போராடிய ஜோ ரூட் 120 ரன்களில் அணியை ஓரளவு கரைச் சேர்த்துச் சென்றார். கடைசியில் ஒரே நம்பிக்கையாக இருந்த ஓவர்ட்டனும் 32 ரன்களில் வெளியேற இங்கிலாந்து வெற்றி மயிரிழையில் பறிபோனது. அசத்தலான பந்துவீச்சை வெளிக்காட்டிய ஓமர்சாய் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காக விளங்கினார்.

- Advertisement -

இங்கிலாந்து அணி கடந்த 3 ஐசிசி தொடர்களான 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20ஐ உலகக் கோப்பை மற்றும் நடப்பு 2025 சாம்பியன்ஸ் டிராபியில் சுதப்பியுள்ளது. அண்மையில் நடந்த இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடரிலும் 0-3 என ஒயிட் வாஷ் ஆனது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியின் இந்த மோசமான ஆட்டம் பற்றி இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் மைக்கல் வாகன் உட்பட அனைவரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி பற்றி வாசிம் அக்ரம் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, ” இங்கிலாந்து அணியின் இந்தக் கிரிக்கெட் ஃபார்ம் அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தைக் கொடுக்கும். என்னுடைய நண்பர் நீல் ஃபேர்பிரதரிடம் நேற்றைய தோல்வி பற்றிக் கேட்ட போது தான் சோகத்தில் அழுததாகத் தெரிவித்தார். மேலும் இங்கிலாந்து அணியில் பந்துவீச 8 வீரர்கள் இருந்தாலும் 5வது முழுமையான பந்துவீச்சாளர் இல்லை என்பதால், அதனால் ஜோ ரூட் பந்துவீசி சமாளிக்க நேரிடுவதாக என்னிடம் வருந்தினார். ” என்றார் வாசிம் அக்ரம்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles