ஒட்டுமொத்தமாக சரணடைந்த நாசர் ஹுசைன்.. கொஞ்ச நஞ்ச பேச்சாயா பேசுன.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றியது.

- Advertisement -

இந்த தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசைன் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரை பொருத்தவரை லீத் தொடரில் பாகிஸ்தான் அணியை தவிர இந்திய அணிக்கு வேறு பெரிய அணிகள் எதுவும் அமையவில்லை. இருப்பினும் அமெரிக்கா, அயர்லாந்து அணிகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் அடுத்த சுற்றில் வங்கதேசம் இந்த உலகக் கோப்பை தொடரில் நன்றாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் அணி மற்றும் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா அணியையும் வீழ்த்தியது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய அதே கையோடு கயானாவில் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆடுகளத்தின் தன்மை மற்றும் மைதான சூழல் ஆகியவற்றிற்கு இந்திய அணி உடனடியாக செட் ஆகிக் கொள்வது இந்த வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியா இங்கிலாந்து போட்டிக்கு முன்னாக இங்கிலாந்து அணி இந்தியாவை நிச்சயமாக வீழ்த்தும் என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர் நாசர் ஹுசேன் கூறியிருந்தார். ஆனால் இந்திய அணியின் செயல்பாட்டை பார்த்து பிறகு இந்த வெற்றிக்கு இந்தியா தகுதியான அணி என்று கூறி ஒட்டுமொத்தமாக சரணடைந்தார். இது குறித்து அவர் கூறும் பொழுது “ஆடுகளம் மற்றும் மைதான சூழல் உள்ளிட்ட அனைத்துமே இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டியை எட்டும் நோக்கத்தோடு போட்டி அமைந்தது என்பது வேறு கதை.

- Advertisement -

இருப்பினும் இதை கொஞ்சம் விரிவாக பார்த்தால் செயின்ட் லூசியாவில் இந்திய அணி 50 ஓவர் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி கயானாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆடுகளம் மெதுவாக இருந்த போதிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். அவர்கள் விளையாடிய விதத்தில் நியாயம் இருக்கிறது. இந்திய அணிக்கு இறுதிப்போட்டியாக தென்னாப்பிரிக்கா அணியோடு மோத உள்ளது.

இதையும் படிங்க:ரோஹித்காகவே இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்.. நிஜமாகவே அவர் ஒரு சுயநலமற்ற வீரர்- அக்தர் பாராட்டு

2022ம் ஆண்டு நடைபெற்ற அரை இறுதியில் இந்திய அணி 168 ரன்கள் அடித்தது. இருப்பினும் இந்த போட்டியில் அதைவிட அதிகமாகவே அடித்தது. இந்த ஆடுகளத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ஸ்பின்னர்கள் நன்றாக பந்து வீசி இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தினர். தனக்கு விருப்பமான ஃபுல் ஷாட் அடித்து ரோகித் சர்மா அந்த போட்டியில் அரைத்தும் அடித்தார். மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆவி வரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர் ” என்று கூறியிருக்கிறார். வெற்றிக்கு முன்னர் ஒரு மாதிரியும் வெற்றிக்கு பின்னர் ஒரு மாதிரியும் பேசி வரும் நாசர் ஹுசேனை தற்போது ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles