ரோஹித்காகவே இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்.. நிஜமாகவே அவர் ஒரு சுயநலமற்ற வீரர்- அக்தர் பாராட்டு

2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணியை மட்டும் இந்திய அணி வீழ்த்தினால் இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றும்.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயப் அக்தர், ரோஹித் சர்மா சுயநலமற்ற வீர எனவும் அவருக்காக இந்தியா உலக கோப்பையை வெல்ல வேண்டும் எனவும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்து இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வி பெறாமல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. லீக் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை தவிர சிறிய அணிகளை வீழ்த்தினாலும் சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி கம்பீரமாக அரை இறுதிக்கு முன்னேறியது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியிலும் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் இதே போன்று தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வந்த இந்திய அணி இறுதிப் போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி உலகக் கோப்பை நழுவி விட்டது.

இதனால் இந்த முறை அதுபோல சிறு தவறு கூட நிகழக்கூடாது என்பதில் இந்திய வீரர்கள் கவனமாக இருக்கின்றனர். இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியடைந்த போது தானும் மனமடைந்ததாகவும், ரோகித் சர்மா போன்ற சுயநலமற்ற கேப்டனுக்காக இந்திய அணி இந்த உலகக் கோப்பை கைப்பற்ற வேண்டும் எனவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீர அக்தர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சோயப் அக்தர் விரிவாக கூறும்பொழுது ” இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியடைந்த போது நானும் மனமுடைந்தேன். ஏனெனில் இந்தியா வெல்வதற்கு தகுதியான அணி. அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று இறுதியாக இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பு நழுவ விட்டது. மேலும் நேற்றைய போட்டியில் இந்தியாவால் எந்த சூழ்நிலையும் சமாளிக்க முடியும்.

இதையும் படிங்க:இவங்க ரெண்டு பேர்தான் காரணம்.. போன தடவை எது நம்மகிட்ட மிஸ் ஆச்சோ இப்போ சரியா பண்ணாங்க- அஸ்வின் பேட்டி

ஆனால் இங்கிலாந்து அணியால் சூழலை சமாளிக்க முடியாது. ரோஹித் சர்மா சுழற் பந்துவீச்சாளர் அடில் ரசீதை சமாளித்து சிறப்பாக கையாண்டார். இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் குவித்து இந்தியாவை அழுத்தத்தில் தள்ளி இருக்க வேண்டும். ஆனால் முதலில் பேட்டிங் தான் செய்வேன் என்று அடம் பிடித்தது. இதனால் இந்திய அணி தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் இந்த உலக கோப்பையில் வெற்றி பெற வேண்டும். சுயநலம் இல்லாத கேப்டனாக விளையாடும் ரோஹித் சர்மா அவரது கிரிக்கெட் வாழ்க்கையை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles