நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
2022ஆம் ஆண்டு இதே இங்கிலாந்து அணியிடம் டி20 உலக கோப்பையில் தோல்வி அடைந்ததற்கும், நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கும் இருக்கும் வித்தியாசத்தை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கி இருக்கிறார்.
2022ஆம் ஆண்டு அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 168 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே அந்த இலக்கை எட்டிப்பிடித்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பார்கள். குறிப்பாக அந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி இருக்கும்.
ஆனால் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சும் மிகச் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியது. ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை மற்ற இந்திய வீரர்களும் பின்பற்றி இங்கிலாந்து அணிக்கு சவாலான ஸ்கோரை நிர்ணயத்தனார். இந்த நிலையில் அந்த போட்டிக்கும் நேற்று நடைபெற்ற போட்டிக்கும் இருக்கும் வித்தியாசத்தை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெளிவாக கூறியிருக்கிறார்.
இது குறித்து அஸ்வின் விரிவாக கூறும்பொழுது “கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் நாம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 168 ரன்கள் அடித்திருப்போம். அந்த சமயத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆறு ஓவர்களில் 45 ரன்கள் குவித்திருந்தாலே எளிதாக வெற்றி பெற்று இருப்பார்கள். ஆனால் அந்த போட்டியில் ஆறு ஓவர்களில் 70 ரன்கள் குவித்து விட்டார்கள். அங்கேயே போட்டி முடிந்து விட்டது இங்கிலாந்து கடைசியில் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு பின்புறம் நமக்கு கிடைத்தது 12 ரன்கள் மட்டுமே தான். பெரிதாக யாரும் அந்த திசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடவில்லை. ஆனால் நேற்றைய போட்டியில் மொத்தம் 39 ரன்கள் ஸ்கொயர் ஆப் திசையில் நமக்கு கிடைத்தது. இதற்குக் காரணம் சூரியகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடித்த ஸ்வீப் ஷாட்கள் தான். இந்த 39 ரன்களை நாம் தூக்கிவிட்டால் நாம் மொத்தமாகவே 145 ரன்கள் தான் அடித்திருப்போம். அது இங்கிலாந்து அணிக்கு எளிதாக இருந்திருக்கும்.
இதையும் படிங்க:நான் எப்பவும் போல பந்து வீசிருந்தா.. கண்டிப்பா ரன்கள் கொடுத்து இருப்பேன்.. ஆனா விக்கெட் எடுக்க காரணமே இதுதான் – அக்சார் பேட்டி
பந்தை நேராக பவுண்டரிக்கு அடிப்பது சிரமமாக இருக்கும் சமயங்களில் இது போன்ற ஸ்வீப் ஷாட்கள் போட்டியின் முடிவை நிர்ணயிக்கக் கூடிய வகையில் அமைகிறது நல்ல விஷயமாகும். இதுவே நமது வெற்றிக்கு தற்போது மிகப்பெரிய காரணியாகவும் அமைந்திருக்கிறது” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

