உங்க ஆசைக்கு ஷமி மாதிரியான நல்ல பவுலரை அழிச்சிடாதீங்க.. இப்படி செஞ்சா அவரோட தன்னம்பிக்கையே போயிரும் – மைக்கேல் வாகன் விமர்சனம்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏழாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணி விளையாடி வரும் விதம் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் அணிகளை பொருத்தவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மிக பலமான பேட்டிங் வரிசை உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 284 ரன்கள் குவித்து 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த சீசன் மற்றும் இந்த சீசனிலும் இந்த அணி அதிக ரன்கள் குவிக்கக்கூடிய அணியாக இருந்து வரும் சூழலில் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் 300 ரன்கள் குவிக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அதற்குத் தகுந்த முறையிலேயே சன்ரைசர்ஸ் அணியும் தனது ஆட்டம் முறையை மாற்றாமல் ஒரே மாதிரியாக அதிரடியாக விளையாடும் முறையை கையாண்டது. ஆனால் லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சால் 190 ரன்கள் மட்டுமே குவித்து லக்னோ அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் சன்ரைசர்ஸ் அணி, பந்துவீச்சாளர்களை அழித்து வருவதாகவும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட வேண்டும் எனவும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” வெளிப்படையாகவே நாம் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் பவர் மற்றும் அதிக ரன்கள் குவிப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதே சமயத்தில் அந்த அணி அவர்களின் பவுலர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த அணியின் பவுலர்கள் சாலை போன்ற ஆடுகளத்தில் பந்து வீசி வருகிறார்கள். கம்மின்ஸ் நேற்றைய போட்டியில் நன்றாக விளையாடினார். ஆனால் முதல் போட்டியில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க:மைதானத்திற்கு மக்களை கூட்டி வர.. தோனியை தவிர வேறு யாரையும் சிஎஸ்கே உருவாக்கவில்லை.. இது விளையாட்டுக்கு நல்லதல்ல – ராயுடு ஆதங்கம்

ஆடம் ஜம்பாவுக்கு நேற்றைய இரவு மோசமான இரவாக அமைந்து விட்டது. அதேபோல முகமது சமி ஒரு ஓவருக்கு 12 ரன்கள் கொடுத்து வருகிறார். இதன் மூலமாக அவர்கள் தங்களது தன்னம்பிக்கையை இழந்து வருகிறார்கள். திடீரென்று அவர்கள் நன்றாக வீச வேண்டும் என்று நினைப்பது நடக்காது. ஒரு பெரிய தொடரில் ஒரு அணி ஒரே மாதிரியான அணுகுமுறையை கடைபிடித்து வருவதை நான் பார்த்தது கிடையாது. எனவே அவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தங்களது கியர்களை மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும் அதுவே வெற்றி பெறுவதற்கு வழிவகுக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles