இன்று நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு சிஎஸ்கே குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடும் போட்டிகளை பொருத்தவரை தோனியை பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிக அளவு மைதானத்திற்கு வருகிறார்கள். சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் என்பதைத் தாண்டி முதலில் தோனிக்கு ரசிகராக இருந்து தோனி விளையாடுவதை பார்க்க அதிக ஆர்வம் காட்டுவது மற்ற அணி வீரர்களுக்கு நல்லதல்ல என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் ராய்டு கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நீங்கள் புதியவராக இருந்தால், சிஎஸ்கே அணியில் இந்த அனுபவம் மிகவும் பயமாக இருக்கும். சத்தம் அதிகமாகவும், ஆதரவு அதிக அளவில் இருக்கும். நீங்கள் சிஎஸ்கே அணிக்கு விளையாடும் போது சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ரசிகராக இருப்பதற்கு முன்பாகவே தோனிக்கு ரசிகராகி விட்டார்கள் என்பது நன்றாக தெரியும். தோனி சென்னை அணிக்காக என்ன செய்தார் என்பதை ரசிகர்கள் நினைத்து நேசிக்கும் அளவுக்கு மாறி விட்டார்கள்.
சில வருடங்களாக இந்த விஷயம் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது அவுட் ஆகும்படி கத்துகிறார்கள். உண்மையில் நீங்கள் அவுட் ஆகும்படி சத்தம் போடுகிறார்கள். நீங்கள் ஆட்டம் இழந்து வெளியேறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். உண்மையில் இந்த அனுபவம் விசித்திரமானது தான்.
இப்படி தோனிக்கு உண்மையில் விசித்திரமாக ஆதரவு கிடைப்பதும், ஒருதலைபட்சமாக ஆதரவு கிடைப்பதும் அவருக்காக இன்னொரு வீரரை வெளியேறுமாறு சொல்வதும் விளையாட்டை நன்றாக விளையாடுவதற்கு உதவி செய்வதில்லை. அணியில் உள்ள மற்ற எல்லா வீரர்களும் தங்களால் முடிந்த அளவு வெற்றி பெற வைப்பதற்காகவே விளையாடுகிறார்கள்.
இதையும் படிங்க:6 சிக்ஸ், 6 பவுண்டரி.. 26 பந்தில்70 ரன்கள் குவித்த பூரன்.. ஐதராபாத்தை சொல்லி வைத்து அடித்த லக்னோ!
இது மிகவும் சவாலானதாக இருக்கும். வார நாட்களில் கூட சிஎஸ்கே அணிக்கு போட்டி இருக்கும்போது மைதானம் மிகவும் அதிக அளவில் நிரம்பி வழியக் கூடியதாக இருக்கும். மைதானத்தில் மக்களைக் கொண்டு வருவதற்கு தோனி இருக்கிறார். ஆனால் சிஎஸ்கே மக்களை மைதானத்திற்குள் கொண்டு வருவதற்கு தோனியைத் தவிர வேறு யாரையும் உருவாக்கவில்லை” என்று பேசி இருக்கிறார்.

