எழுதி வச்சுக்கோங்க.. சாம்பியன் கோப்பையை இந்த அணி தான் கைப்பற்றும்.. ஹைடன் கூறும் ரகசியம்

நாளை நடைபெற உள்ள ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி 17வது சாம்பியன் கோப்பையை கைப்பற்றும்.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிசமமாக பார்க்கப்படும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் சாம்பியன் பட்டத்தை பெற போகும் அணி குறித்துக் கூறி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த மார்ச் மாதம் துவங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது லீக் போட்டிகள், பிளே ஆப் போட்டிகள் முடிந்து தற்போது இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இருந்தன.

- Advertisement -

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூர் அணியும், கொல்கத்தா அணி, சன் ரைசர்ஸ் அணியையும் வீழ்த்த கொல்கத்தா அணி ஆனது நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது வாய்ப்புக்காக காத்திருந்த சன்ரைசர்ஸ் அணி பெங்களூர் அணியை தோற்கடித்த ராஜஸ்தான் அணியை வீழ்த்தி நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இரண்டு அணிகளிலும் பேட்டிங் பந்து வீச்சு என இரண்டுமே சரிசமமாக விளங்குவதால் வெற்றி வாய்ப்பை இரண்டு அணிகளும் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காது என்றே அனைவராலும் கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கொல்கத்தா அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதற்கான காரணத்தை அவர் கூறும் பொழுது
“கொல்கத்தா அணி முதல் பிளே ஆப் போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதால் அந்த அணிக்கு ஓய்வு பெற சில நாட்கள் நன்றாகவே கிடைத்துள்ளன. மேலும் மனதளவிலும், உடலளவிலும் சில நாட்களில் அவர்கள் நன்றாகவே ஓய்வு பெற்றிருப்பார்கள். மேலும் சென்னை ஆடுகளத்தை பொருத்தவரை சிவப்பு மண் கொண்ட ஆடுகளமாக இது தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாவம்ங்க இவர் நிலைமை.. கிரிக்கெட் வாழ்விலும் தோல்வி.. சொந்த வாழ்வில் ஏற்படும் சறுக்கல்.. பாண்டியாவுக்காக வருந்தும் ரசிகர்கள்

இந்த காரணத்தினால் கொல்கத்தா அணியில் உள்ள சுனில் நரேன் மற்றும் வரும் சக்கரவர்த்தி ஆகியோருக்கு இது பெரிதாக கை கொடுக்கும். இந்த சூழ்நிலைகளால் கொல்கத்தா அணியே இந்த முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது” என்று அவர் கூறியிருக்கிறார். இருப்பினும் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி தருவதால் இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles