யாருக்குமே இந்த நிலைமை வரக்கூடாது.. ஹர்திக் செயலால் ரோஹித் ரசிகர்கள் கோபம்.. 5 முறை கோப்பை வென்ற வீரர் பா

நேற்று நடைபெற்ற 17 வது சீசன் ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன் ஸ் அணிகள் மோதின. மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங்கின் போது ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மாவை வழிநடத்திய விதம் குறித்து ரசிகர்கள் பாண்டியாவைக் கண்டித்து வருகின்றனர்.

- Advertisement -

அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அதன் பிறகு பேட்டிங் செய்த மும்பை அணி குஜராத் அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சினை தாக்குப் பிடிக்க முடியாமல் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே குவித்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டது மட்டுமில்லாமல் ஐந்து முறை மும்பை அணிக்காக ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை கேப்டன்ஷியில் இருந்து நீக்கிவிட்டு குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை ஏலத்தின் மூலம் எடுத்து கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது.

- Advertisement -

இது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் மட்டுமின்றி குஜராத் அணி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒரு தரப்பினர் ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவிடம் திட்டமிட்டு கேப்டன் பதவியை பறித்துக் கொண்டதாகவும், ஒரு தரப்பினர் ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் தலைமையிலான அணி களமிறங்கியது. அப்போது பீல்டிங்கில் நின்ற ரோகித் சர்மாவை ஹர்திக் பாண்டியா மைதானத்தைச் சுற்றி பல இடங்களில் அலைக்கழித்ததாகவும், ஒரு சீனியர் வீரரை இவ்வாறு வழி நடத்துவது சரி இல்லை என்றும் ரசிகர்கள் பாண்டியா மீது குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

- Advertisement -

மேலும் சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் முன்னாள் கேப்டன் தோனியிடம் மரியாதையாக ஆலோசனை கேட்கும் வீடியோவையும், ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவை வழி நடத்திய விதம் குறித்து அந்த வீடியோவை கம்பேர் செய்து வருகின்றனர். மேலும் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிர்ப்பு மைதானத்திலேயே தெரிந்தது.

மேலும் ரோகித் சர்மா மைதானத்திற்குள் பேட்டிங் செய்ய வந்த போது ‘ரோகித் ரோகித்’ என்று கர ஒலி எழுப்பிய ரசிகர்கள் பாண்டியா பேட்டிங் செய்ய வந்த போது அவருக்கு எதிராக கூச்சலிட்டும் தங்கள் அதிருப்தியிணை வெளிப்படுத்தி வந்தனர். எனவே இவற்றை கடந்து ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles