பிரபல இலங்கை ரசிகர் மறைவு.. உருக்கமான பதிவை வெளியிட்ட சங்ககாரா.!

இலங்கை அணியின் பிரபலமான கிரிக்கெட் ரசிகர் மற்றும் ரசிகர்களால் பெர்சி அங்கிள் என்று அழைக்கப்படும் அபிஷேகரா பெர்சி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை கிரிக்கெட்டின் மற்றொரு உருவமாக விளங்கியவர் அங்கிள் பெர்சி.

- Advertisement -

இவர் 1979 உலகக் கோப்பை முதல் இலங்கை அணியின் போட்டிகளை நேரில் சென்று காண்பதோடு வீரர்களை மகிழ்வித்து வந்தாலும் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளின் போது தான் உலகெங்கிலும் பிரபலம் அடைந்தார். அந்த உலகக் கோப்பையை இந்தியா இளம் மற்றும் இலங்கை இணைந்து நடத்தின. லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று தருமங்களில் இவர் இலங்கையின் கொடிகளை அசைத்ததை ரசிகர்கள் யாரும் மறந்திருக்க முடியாது.

- Advertisement -

இலங்கை அணியின் வீரர்கள் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் அங்கிள் பெர்சி. இவர் மைதானத்தின் பவுண்டரி லைன் அருகில் நின்று இலங்கை அணி வீரர்களை உற்சாகப்படுத்துவதோடு மைதானத்திற்கு விளையாட வரும் வீரர்களையும் அவுட் ஆகி பிளியன் திரும்பும் வீரர்களையும் இலங்கை கொடியுடன் அரவணைத்து செல்வார். இந்த காட்சிகள் கிரிக்கட் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவை.

- Advertisement -

1979 ஆம் ஆண்டிலிருந்து 2010 களின் தொடக்கம் வரை இலங்கை அணியை கிரிக்கெட் ரசிகராக இருந்து உற்சாகப்படுத்தியவர். அதன் பிறகு உடல் நலக்குறைவால் போட்டிகளைக் காண நேரில் வர இயலவில்லை. நீண்ட காலமாக படுக்கையில் இருந்த இவர் நேற்று மரணம் அடைந்தார். கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்களுக்கும் அங்கிள் பெர்சி மிகவும் விருப்பமான நபராக இருந்திருக்கிறார். ஒருமுறை நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மறைந்த மார்ட்டின் குரோ தனது ஆட்ட நாயகன் விருதை அங்கிள் பெர்சிக்கு வழங்கி அவரை கௌரவப்படுத்தினார் . இவர் கிரிக்கெட்டின் மீது வைத்திருக்கும் காதலும் இவரது கிரிக்கெட் மீதான ஈடுபாடும் அலாதியானது.

இவரது இரண்டு பேரன்களில் ஒருவருக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் சர் கர்ஃபீல்ட் சோபர்ஸ் பெயரை கர்ஃபீல்டு என வைத்திருக்கிறார். மற்றொரு பேரனுக்கு சச்சின் டெண்டுல்கரின் ஞாபகம் ஆக சச்சின்கா என பெயர் சூட்டி இருக்கிறார். இதிலிருந்தே கிரிக்கெட்டின் மீதான இவரது காதலை தெரிந்து கொள்ளலாம். இவரது மறைவையொட்டி இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

- Advertisement -

இது தொடர்பாக பதிவிட்டிருந்த இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா ” நான் சர்வதேச கிரிக்கெட் விளையாடிய முதல் போட்டியில் இருந்து எனது கடைசி போட்டி வரை அங்கிள் பெர்சி இலங்கை அணிக்காக மைதானங்களில் எங்களை உற்சாகப்படுத்தினார். கிரிக்கெட்டைப் பற்றி அவரது அறிவும் கிரிக்கெட்டின் மீதான தீராத ஈடுபாடு மற்றும் காதலும் கிரிக்கெட்டுக்கு மைதானங்களில் அவர் பாடும் பாடல்களும் இனி வரும் காலங்களில் நாம் கேட்க முடியாது என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரைப் போன்ற ஒரு ரசிகரை கிரிக்கெட் உலகம் இழந்து விட்டது. நீங்கள் ஓய்வெடுங்கள் அங்கிள் பெர்சி” என சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவு செய்திருக்கிறார் சங்ககாரா.

மேலும் தற்போது உலக கோப்பையில் விளையாடி வரும் இலங்கை வீரர்களும் இலங்கையின் முன்னாள் வீரர்கள் ஆன ஜெயசூர்யா போன்றோரும் அங்கிள் பெர்சி மறைவிற்கு தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். 1948 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த போது டான் பிராட்மேன் விளையாடியதை காலே மைதானத்தில் சிறுவனாக பெர்சி கண்டு ரசித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரட் மேனியில் தொடங்கி சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை அனைத்து வீரர்களையும் கண்டு ரசித்திருக்கிறார் பெர்சி. கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகளின் போது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த பெர்சியை அவரது வீட்டிற்கு சென்று நலம் விசாரித்து வந்தார் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles