தோனிக்காக நான் ஜெயிக்கனும் .. ஆனா அவருக்காக நான் ஜெயிக்க கூடாது.. காரணம் என்ன.? விளக்குகிறார் டூப்ளஸ்சிஸ்

ஐபிஎல் போட்டி வருகிற 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியாக சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டூ பிளஸ்சிஸ் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவராக இருந்தாலும், ஏபி டிவில்லியர்ஸ் போன்று இந்திய ரசிகர்களால் அதிகம் அறியப்பட்டவர்.

- Advertisement -

காரணம் அவர் ஐபிஎல்லின் பெரும் பகுதி சென்னை அணிக்காகவே விளையாடியுள்ளார். எனவே அவருக்கும் சென்னை அணிக்குமான தொடர்பு மிக நெருக்கமானது. சென்னை அணி தனக்கு மிக நெருக்கமான வீரர்களை வெளியே விடாது தக்க வைத்துக் கொள்ளும். ஆனால் இதில் டூப்ளஸ்சிஸ் மட்டும் விதிவிலக்காக வெளியே சென்றார்.

- Advertisement -

2022ஆம் ஆண்டு அவர் ஏலத்திற்கு வந்தபோது அவரின் வயது உள்ளிட்ட காரணங்களால் சென்னை அணி பெரிய தொகைக்கு செல்ல விரும்பவில்லை. மாறாக பெங்களூர் அணியில் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், அவருக்கு மாற்றாக ஒரு நல்ல கேப்டன் தேவைப்பட்டது. எனவே பெங்களூர் அணி ஏழு கோடிக்கு டூ பிளஸ்சிஸை வாங்கி கேப்டன் ஆக நியமித்தது.

- Advertisement -

அவரின் தலைமையில் பெங்களூர் அணி நன்றாகவே விளையாடி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த சீசனில் பிளே ஆப் வரை கூட்டிச் சென்று விட்டு தோல்வி அடைந்தார். எனவே இம்முறை கோப்பையை வெல்லும் கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது. காரணம் சமீபத்தில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மகளிர் பெங்களூர் அணி கோப்பையை தட்டிச் சென்றது.

இதனால் கோப்பையை வெல்லும் நெருக்கடியில் இருக்கும் பெங்களூர் அணி இம்முறை சிறந்த பங்களிப்பை கொடுக்கும். இருப்பினும் அணியின் கேப்டன் டூப்ளசிஸ் 2022ஆம் ஆண்டு சென்னை அணி தன்னை வாங்காத பொழுது, அணியை விட்டு பிரிவது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். எனவே சென்னை அணி குறித்தும், மகேந்திர சிங் தோனிக்கும் தனக்கும் இருக்கிற சகோதரத்துவம் குறித்து பேசி இருக்கிறார். இது குறித்த அவர் கூறுகையில்

- Advertisement -

“தோனி எப்பொழுதுமே ஒரு சிறந்த கேப்டன். அவருடன் சென்னை அணியில் இணைந்து நேரத்தை செலவு செய்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை அணியில் இருந்தது என்னுடைய தொழில் முறை கிரிக்கெட் வாழ்விற்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அணி வீரர் என்பதைத் தாண்டி என்னை ஒரு கேப்டனாக வடிவமைத்த இடம் சென்னை.

மகேந்திர சிங் தோனி எனது சகோதரன் போன்றவர். அணி தாண்டி இருப்பினும், எங்களுக்கிடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும். சென்னை, பெங்களூர் இடையேயான போட்டியில் நீங்கள் அவரை வெல்ல விரும்புகிறீர்கள். ஆனால் வெல்லக்கூடாது. ஏனெனில் தோனி மீது அவ்வளவு மரியாதை எனக்குள் இருக்கிறது. என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles