“இந்த ஒரு இந்திய வீரரை மட்டும் தவறி கூட சீண்டி பாக்காதீங்க” – லெஜன்ட் நிடினி அதிரடி.!

வேகப்பந்து வீச்சிக்கு பெயர் போன தென்னாப்பிரிக்கா அணியில் புதிய புயலாக களம் இறங்கியவர் மக்காயா நிடினி. தென்னாப்பிரிக்கா அணிக்காக முதல் முதலாக சர்வதேச போட்டிகளில் விளையாடிய கருப்பினத்தவர் நிடினி என்பது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது தென் ஆப்பிரிக்கா அணிக்காக களம் கண்டார் .

- Advertisement -

இவர் தென்னாபிரிக்க அணிக்காக 101 டெஸ்ட் போட்டிகள் 173 ஒரு நாள் போட்டிகள் மற்றும் பத்து டி20 போட்டிகளில் விளையாடி முறையே டெஸ்ட் போட்டிகளில் 390 விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டிகளில் 266 விக்கெட்களையும் டி20 சர்வதேச போட்டிகளில் ஆரம்பிக்கட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய இவர் ஒன்பது போட்டிகளில் விளையாடி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது முன்னாள் வீரர்கள் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை முழுவதும் நடைபெற இருக்கின்ற 13-வது உலகக்கோப்பையின் மீது திரும்பி இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் யார் அதிக ரன்கள் எடுப்பார்கள் எந்த வீரர் அதிக விக்கெட் வீழ்த்துவார் மற்றும் எந்த அணி உலக சாம்பியன் பட்டம் வெல்லும் என ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும் நடைபெற இருக்கின்ற உலகக் கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக யார் இருப்பார் எனவும் பல முன்னால் வீரர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தென்னாப்பிரிக்க அணியின் காலிஸ் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் இந்த தொடரில் அதிகமான ரன்களை குவிப்பார் என தெரிவித்திருந்தார். மேலும் இந்திய அணியின் அதிரடி வீரரான வீரேந்தர் சேவாக் இந்தியா கேப்டன் ரோகித் சர்மா 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுப்பார் என தனது கருத்தை தெரிவித்தார். தற்போது தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான நிடினி இந்திய அணியின் முன்னணி வீரரை உலகக் கோப்பையின் போது சீண்டி விடாதீர்கள் அது உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த அவர் ” ஒரு பந்துவீச்சாளராக சொல்கிறேன் அவருக்கு எதிராக பந்து வீசும் போது அவரை சீண்டி விடாதீர்கள். மேலும் கோபப்படுத்தாதீர்கள். அவர் யாராவது தன்னை கோபப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். நீங்கள் அதைச் செய்யும்போது அவரது சிறந்த ஆட்டம் அவரிடம் இருந்து வெளிப்படும் . அதன்பிறகு அவரை கட்டுப்படுத்துவது என்பது இயலாத ஒன்று. அதனால் நீங்கள் சிறப்பாக பந்து வீசுங்கள் அவருடைய நேச்சுரலான கேமை விளையாட விடுங்கள். அவர் தவறு செய்வதற்காக காத்திருங்கள். அப்படித்தான் வியூகம் வகுத்து தற்போது எதிரணி விராட் கோலி ஆட்டம் இழக்க செய்கிறது” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர் ” நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக பார்க்க வேண்டும் அவருக்கு எதிராக யாராவது அவரை திட்டும்போது அல்லது சீண்டும்போது அவர் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மன் ஆகிறார் . அதனால் ஆடுகளத்தில் அவரது போக்கிலேயே விளையாட விடுங்கள் . அவர் ஆட்டத்தில் ஏதேனும் தவறு செய்வதற்காக காத்திருங்கள். இந்தியாவிற்கு எதிராக விளையாடும் போது இந்த ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து அவரை சீண்டி மட்டும் விடாதீர்கள்” என தெரிவித்திருக்கிறார் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர்.

நடைபெற இருக்கின்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் எட்டாம் தேதி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதன் பிறகு பதினொன்றாம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் டெல்லியில் வைத்து விளையாடுகிறது. மேலும் அக்டோபர் 14ஆம் தேதி உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியா தற்போது இலங்கை சென்று ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles