இந்த 2 விஷயத்துல இந்திய அணி மாட்டாம இருந்தா.. T20 WC இன்னொரு முறை இந்திய அணி நிச்சயமா வெல்லும் – தினேஷ் கார்த்திக் கணிப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்தவுடன் சொந்த மண்ணில் டி20 உலக கோப்பையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதில் பிப்ரவரி 7ஆம் தேதி அமெரிக்க அணிக்கு எதிராக தனது முதல் போட்டியுடன் இந்திய அணி தனது உலகக்கோப்பை பயணத்தை தொடங்க உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணி 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை விளையாடிய 36 டி20 போட்டிகளில் இந்திய அணி 29 இல் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய அணியை பொறுத்தவரை டெத் ஓவர்களில் சற்று பிரச்சனை இருப்பது போல தெரிகிறது என்று நுணுக்கமாக ஆராய் வேண்டிய பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “இந்திய அணி t20 கிரிக்கெட்டில் பெரும் வெற்றி என்பது சாதாரண விஷயம் அல்ல. 36 போட்டிகளில் 29 போட்டிகள் வெற்றி என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை மூன்று முறை வீழ்த்தியதும் இதில் அடங்கும். இருப்பினும் அணியின் காம்பினேஷன்தான் சற்று சவாலாக உள்ளது. ஆசிய மைதானங்களில் இந்திய அணி பெரும்பாலும் சுழற் பந்து வீச்சாளரை தான் நம்பிக் களம் இறங்குகிறது. ஃபாஸ்ட் பௌலிங்கில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவை நம்பி இருக்கிறோம். மூன்றாவது பவுலராக சிவம் துபேவை நம்பி உள்ளோம். ஒருவேளை ஆட்டம் கடைசி வரை இழுத்துச் செல்லப்பட்டாலோ அல்லது பனிப்பொழிவு காரணமாக பந்து சுழலவில்லை என்றாலோ கடைசி ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவது இந்திய அணிக்கு கடினமாக மாறலாம் எனக்கு தெரிந்து ஒரே குளறுபடி இந்த இடத்தில் தான் உள்ளது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles