ஹர்திக் போனா என்ன.. தோனிதான் என்னோட இன்ஸ்பிரேஷன்.. எங்களை வாழ்த்த ஒரு கூட்டமே இருக்கு.. விளக்குகிறார் கேப்டன் கில்

17-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் எதிர்கொள்கின்றன.

- Advertisement -

இப்போட்டி மும்பை மற்றும் குஜராத் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது காரணம் குஜராத் அணியில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி ரோகித் சர்மாவை கேப்டன்ஷியில் இருந்து நீக்கிவிட்டு பாண்டியாவை கேப்டனாக அறிவித்தது. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எடுத்துக்காட்டாக பாண்டியவை கேப்டனாக அறிவித்ததில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளங்களில் பாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்தது.

- Advertisement -

மேலும் ஹர்திக் பாண்டியாவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததாக குஜராத் அணி நிர்வாகம் கூறுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் சாதாரண வீரராக விளையாடிய இவரை குஜராத் அணி தான் ஏலத்தில் வாங்கி கேப்டன் ஆகவும் நியமித்தது. அப்படிப்பட்ட அணியை விட்டுவிட்டு திரும்பவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றது குஜராத் ரசிகர்களுக்கும் சற்று கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் குஜராத் அணியின் புதிய கேப்டனாக இந்திய இளம் வீரர் சுப்மேன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். 24 வயதான இந்த இளம் வீரர் ஐபிஎல் கேப்டன்களிலேயே இளம் வயது கேப்டன் என்ற பெருமையும் பெறுகிறார். இவரது தலைமையிலேயே இன்று நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோதுகிறது.

எனவே புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள கில் தோனிதான் தன்னுடைய இன்ஸ்பிரேஷன் என்றும், மேலும் கோலி, ரோகித் ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் கூறி இருக்கிறார் இது குறித்து அவர் கூறுகையில்
“தோனிதான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். ஆனால் அவரின் கீழ் நான் விளையாடியது இல்லை. சிறுவனாக இருந்த போது தொலைக்காட்சிகளில் அவரது போட்டிகளை பார்த்திருக்கிறேன்.

- Advertisement -

மேலும் விராட் கோலியின் தலைமையில் ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் மட்டுமே எனக்கு உண்டு. ஆனால் ரோஹித் பாயிடம் இருந்து தலைமை பண்பு குறித்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அது எனக்கு கேப்டன்சியில் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷமி ஆவியோரது விலகலை மட்டுமே குறிப்பிடுகிறீர்கள். ஆனால் தற்போதும் எங்கள் அணி மிகவும் வலுவாக உள்ளது.

எங்களை வாழ்த்த குஜராத் மைதானத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்கள் காத்திருக்கிறார்கள். எனவே நம்பிக்கையுடன் இந்த தொடரை எதிர்கொள்வோம்” என்று கூறியிருக்கிறார். எனவே முன்னாள் கேப்டனும், புதிய கேப்டனும் மோதும் போட்டி இரு அணி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles