கவலையை விடுங்க.. கான்வே இல்லனா என்ன.. தல தோனி குறி வைக்கும் 3 வீரர்கள்.. குஷியில் ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் காயம் அடைந்திருப்பதைத் தொடர்ந்து அவர் எட்டு வாரங்கள் ஐபிஎல்லில் விளையாட மாட்டார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

இடது கட்டைவிரல் பகுதியில் காயம் அடைந்துள்ள அவர், மூட்டில் எலும்பு முறிவுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். இந்நிலையில் வரும் 22ஆம் தேதி பெங்களூர் அணிக்கு எதிரான தொடக்கப் போட்டியில் கான்வேவிற்கு பதிலாக யாரைக் களம் இறக்குவது என்பது குறித்து சென்னை அணி நிர்வாகம் தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது. எனவே சென்னை அணிக்கு தொடக்க வீரராக களம் இறங்க தற்போது மூன்று வீரர்கள் தேர்வு நிலையில் உள்ளனர். அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

- Advertisement -

1.ரச்சின் ரவீந்தரா

- Advertisement -

இந்தியா வம்சாவழியான ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாடி வரும் நிலையில், கடந்த உலகக்கோப்பையில் அவரது நிதானமான அதிரடி ஆட்டம் கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்தது. அப்போதே இவருக்கு ஐபிஎல் கதவுகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், நல்ல தேர்வாக அவரை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

எனவே தனது முதல் ஐபிஎல் தொடரில் களம் இறங்கும் ரச்சின் ரவீந்திரா எவ்வாறு செயல்பட போகிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவரைதோனி இக்கட்டான சூழ்நிலையில் பயன்படுத்தவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர் தொடக்க வீரராக களம் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

- Advertisement -

2.அஜின்கியா ரஹானே

இந்திய அணியின் அனுபவ வீரரான ரகானே ஐபிஎல் தொடரில் மும்பை அணி முதல் ராஜஸ்தான் அணி வரை தனது சிறந்த பங்களிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர் மூன்றாம் வரிசையில் களம் இறங்கி 172 ஸ்ட்ரைக் ரேட் உடன் 326 ரன்களை குவித்து அசத்தினார்.

இன்னிங்சைத் தொகுத்து வழங்கும் திறமை மற்றும் அவரது நங்கூரமான பேட்டிங் திறன் ஆகியவை சென்னை அணிக்கு மிகப்பெரும் பலமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மகேந்திர சிங் தோனி விரும்பினால் சென்னை அணி நிர்வாகம் இவரைத் தொடக்க வீரராகவும் களமிறக்கும். இவரது அனுபவம் மற்றும் கெய்க்வாட்டின் வேகம் சென்னை அணிக்கு சிறந்த தொடக்கம் அமைய உதவும்.

3.டேரி மிச்சல்

நியூசிலாந்து அணியைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் டேரி மிச்சல் சென்னை அணிக்கு மற்றொரு தொடக்க ஆட்டக்காரராகவும் கருதலாம். உலகக் கோப்பையின் போது இவர் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. உலகக்கோப்பையில் இவர் அடித்த இரண்டு சதங்களும் இந்தியாவுக்கு எதிரானவையே.

அதில் ஒன்று அரை இறுதியில் முக்கியமான தருணத்தில் அடித்தார். இதுவே இவர் அதிக விலைக்கு ஏலம் போக முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. மிச்சல் இதுவரை டி20 போட்டிகளில் 195 போட்டிகளில் விளையாடி, 21 அரை சதங்களுடன் 4251 ரன்களை குவித்துள்ளார். இவரது பவர் பிட்டிங் திறமை அணிக்கு இறுதிக்கட்டத்தில் சிறந்த பலனைக் கொடுக்கும். இதனால் இவரை தோனி இறுதிக் கட்டத்தில் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.

  1. டேரி மிச்சல் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் டேரி மிச்சல் சென்னை அணிக்கு மற்றொரு தொடக்க ஆட்டக்காரராகவும் கருதலாம். உலகக் கோப்பையின் போது இவர் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. உலகக்கோப்பையில் இவர் அடித்த இரண்டு சதங்களும் இந்தியாவுக்கு எதிரானவையே. அதில் ஒன்று அரை இறுதியில் முக்கியமான தருணத்தில் அடித்தார். இதுவே இவர் அதிக விலைக்கு ஏலம் போக முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. மிச்சல் இதுவரை டி20 போட்டிகளில் 195 போட்டிகளில் விளையாடி, 21 அரை சதங்களுடன் 4251 ரன்களை குவித்துள்ளார். இவரது பவர் பிட்டிங் திறமை அணிக்கு இறுதிக்கட்டத்தில் சிறந்த பலனைக் கொடுக்கும். இதனால் இவரை தோனி இறுதிக் கட்டத்தில் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles