அடி மேல் அடி.. சிவம் தூபே தொடர்ந்து மேலும் 2 பேர் காயம்.. செய்வதறியாமல் திகைக்கும் சிஎஸ்கே

17வது ஐபிஎல் சீசன் தொடரானது வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

உலகமே எதிர்பார்க்கும் 17 வது ஐபிஎல் சீசன் தொடர் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில், தற்போது அனைத்து அணிகளும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் தொடக்க ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் வலுவான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் இப்போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்தக் குறுகிய இடைவெளியில் சென்னை அணியின் நட்சத்திர வீரரான சிவம் துபே சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அசாம் அணிக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் காயமடைந்தார். அவர் காயத்தில் இருந்து குணமடைய சராசரியாக 8 வாரங்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இது சென்னை அணிக்குப் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனவே அணி வீரர்கள் தங்களது உடற்பகுதியை கருத்தில் கொள்வது மிகவும் அவசியம். எனவே சிவம் தூபேவிற்கு பதிலாக இந்திய அண்டர் 19 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட சர்ப்ராஸ் கானின் சகோதரர் முசீர் கான் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர் தகவல் இன்னும் வெளிவரவில்லை.

எனவே இந்நிலையில் சென்னை அணிக்காக சமீபத்தில் வாங்கப்பட்ட ரச்சின் ரவீந்தரா மற்றும் தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வே ஆகிய இருவரும் தற்போது காயத்தில் சிக்கி இருப்பதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற ஐம்பது ஓவர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவிந்த்ரா சிறப்பாகச் செயல்பட்டார்.

- Advertisement -

எனவே அவரது மிகச் சிறந்த பேட்டிங் திறன் மற்றும் பந்துவீச்சைக் கருத்தில் கொண்டு சென்னை அணி நிர்வாகம் அவரை ஏலத்தில் 1.8 கோடிக்கு வாங்கியது. சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வலது முட்டியில் காயம் அடைந்தார். எனவே இக்காயம் பெரிதாக இல்லாத நிலையில் அவர் ஓரிரு வாரங்களில் உடத்தகுதி பெற்று விடுவார் என்று தெரிகிறது. அவரைப் போலவே நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரான கான்வே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் கட்டைவிரல் பகுதியில் காயம் அடைந்தார்.

எனவே இவ்விரு வீரர்களின் உடற்தகுதியை சென்னை அணி நிர்வாகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி சீசன் ஆக இருக்கும் வேளையில் அணி வீரர்களின் காயம் தற்போது சென்னை அணிக்கு சிக்கலை உருவாக்கி வருகிறது.

காயங்கள் பெரிதும் இல்லாத நிலையில் இவ்விரு வீரர்கள் விரைவில் குணமாகி சென்னை அணையில் இணைவார்கள் என்று நம்பலாம். எனவே சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் முதல் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles