நன்றி.. விரைவில் சந்திப்போம்.. வாழ்த்திய சிஎஸ்கே.. சிஎஸ்கேவை எச்சரித்த பஞ்சாப் அணி.. என்ன நடந்தது?

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி நிர்ணயித்த மெகா இலக்கை சேசிங் செய்த பஞ்சாப் அணியை குறிப்பிட்டு சிஎஸ்கே அணி ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்தது. அதற்கு பதில் அளித்த பஞ்சாப் அணியின் ட்வீட்டை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

- Advertisement -

கொல்கத்தாவில் நடைபெற்ற 42வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்திருந்தது. அந்த அணியின் சால்ட் அதிகபட்சமாக 75 ரன்களும் சுனில் நரேன் அதிகபட்சமாக 71 ரன்களும் குவித்திருந்தனர். தொடர் தோல்வி சந்தித்து வந்த பஞ்சாப் அணி இந்த போட்டியிலும் தோல்வியடையும் என்றே அனைவரும் கருதினர்.

- Advertisement -

மெகா இலக்கை வெற்றி இலக்காக பஞ்சாப் அணிக்கு நிர்ணயத்த கொல்கத்தா அணி மிகவும் கூலாக பந்து வீசியது. ஆனால் இந்தப் போட்டியில் பிரபு சிம்ரன் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 20 பந்துகள் 54 ரன்கள் குவித்த நிலையில் பிரபு சிம்ரன் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

பின்னர் அவருடன் இணைந்த இந்தியாவின் இளம் வீரர் சசாங்க் சிங் இறங்கிய முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார். சஷாங்க் சிங் 28 பந்தில் 68 ரன்களும், பேர்ஸ்டோ 48 பந்துகளில் 108 ரன்களும் குவித்தனர். இதனால் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றிக்குப் பிறகு பல ஐபிஎல் அணிகள் பஞ்சாப் அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி முதல்வன் படத்தில் இருந்து ஒரு காட்சியை பகிர்ந்து மொத்தம் 523 ரன்கள், 42 சிக்ஸர்கள் உலக விளையாட்டுக்கு அப்பாற்பட்டது என்று பதிவிட்டு இருந்தது. அதற்கு பஞ்சாப் அணி சிஎஸ்கேவின் ட்வீட்டுக்கு சுவாரசியமாக பதில் அளித்து இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க:அக்சர் பட்டேல் ஓவரில் நாங்கள் செய்த தவறு.. இந்த இடத்துலதான் நாங்கள் வெற்றியை நழுவ விட்டோம்.. தோல்விக்கு பின்னர் பேசிய ஹர்திக் பாண்டியா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்வீட்டுக்கு பஞ்சாப் அணி “நன்றி. விரைவில் சந்திப்போம்” என்று பதிவிட்டு இருந்தது ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் இன்னும் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதவில்லை. ஆனால் இதற்குப் பின்னர் பஞ்சாப் அணியுடன் சிஎஸ்கேவுக்கு இரண்டு போட்டிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே மெகா இலக்கை சேஸ் செய்த உத்வேகத்தில் பஞ்சாப் அணி இருப்பதால் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி களத்தில் அனல் பறப்பது உறுதி.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles