ஐபில்க்கு 30 நாள் கூட இல்லை.. நட்சத்திர சிஎஸ்கே ஆல் ரவுண்டர் காயம்.. தல தோனி என்ன செய்ய போகிறார்.?

17வது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடந்த சீசனில் இறுதி போட்டி வரை வந்து தோல்வியைத் தழுவிய குஜராத் டைட்டன்ஸ் அணியும் முதல் போட்டியில் சந்திக்கின்றன.

- Advertisement -

இதில் குஜராத் அணியில் கடந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் பரிமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தில் அந்த அணிக்கு கேப்டனாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அவரது கேப்டன்ஷியில் குஜராத் அணியின் செயல்பாட்டைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் சென்னை அணியின் மூத்த வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் அஜின்கியா ரகானே ஆகியோர் தற்போது மிகத் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைத் தவிர தற்போது நடைபெற்ற மினி ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்ட டேரி மிச்சல் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இந்த சீசனில் களம் இறங்க இருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

- Advertisement -

சென்னை அணியின் மிடில் ஆர்டரில் கடந்த இரண்டு சீசன்களாக சிவம் துபே கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் இறங்கும் இவர் அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்திக் கொண்டிருக்கிறார். கடந்த சீசனில் சிறப்பாக பேட்டிங் செய்த இவர் 160 ஸ்ட்ரைக் ரைட்டில் 418 ரன்கள் குவித்ததோடு, 35 சிக்சர்களையும் விளாசியுள்ளார்.

கடந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சிவம் தூபே இருக்கிறார். எதிர்பாராத விதமாக அவர் தற்போது காயமடைந்து இருப்பது சென்னை அணிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் சிவம் துபே தற்போது வரை இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்களை அடித்துள்ளார். அசாம் அணிக்கு எதிரான போட்டியில் 87 பந்துகளில் அதிவேக சதம் மற்றும் 130 பந்துகளில் 117 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

தற்போது ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் சிவம் தூபே அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இடுப்பு பகுதியில் காயம் அடைந்தார். எனவே அவர் காயத்தில் இருந்து விடுபட எட்டு வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது. தற்போது ஐபிஎல் தொடங்க குறைந்த நாட்களே உள்ள நிலையில் சிவம் துபேவின் காயம் சென்னை அணிக்கு சிக்கலை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே அவருக்கு மாற்று வீரராக சர்பராஸ்கானின் சகோதரரான தற்போது u19 உலகக் கோப்பையில் கலக்கிக் கொண்டிருக்கும் முசிர்கானை வாங்க சென்னை அணி திட்டமிட்டுள்ளது. அது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளிவரவில்லை. அவர் விளையாடும் பட்சத்தில் சிவம் தூபேவிற்கு மாற்றுவீராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles