மகிபாய் எனக்கு அதை சொல்லலனா.. என்னால மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்க முடியாது.. சிஎஸ்கே வீரர் உர்வில் பட்டேல்

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி தங்களது ஆறாவது வெற்றியை பதிவு செய்ததன் மூலமாக புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது..

- Advertisement -

இதற்குப் பிறகு பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் துவக்க வீரர் சஞ்சு சாம்சன் 28 ரன்னில் வெளியேறினாலும் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய உர்வில் பட்டேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 பந்துகளில் 65 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு ஆட்டங்களாக நான் தடுமாறிய போது மஹிபாய் கூறி அட்வைஸ் தனக்கு பெரிய அளவில் பலன் அளித்ததாக அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “நான் சிஎஸ்கே அணிக்காக கடந்த இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் விளையாடவில்லை. அப்போது நான் மகி பாயை தொடர்பு கொண்டு பேசினேன். என் ஆட்டம் முறையில் என்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று விவாதித்தேன். அப்போது அவர் உன் ஆட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. உன் மனநிலையில் தான் பிரச்சனை உள்ளது எனவே உனது மனதை சரியாக வைத்து சரியான பந்தை மட்டுமே அடித்து விளையாடு என்று கூறினார். எனவே இப்போது நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles