சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. ஏற்கனவே சென்னை அணி மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே வீரரான மதிசா பத்திரனா தோனி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்பவர் மதீஷா பதிரானா. இவர் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடவில்லை. அதற்குப் பின்னர் கடந்த இரண்டு ஆட்டங்களில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே பந்துவீச்சில் மிக பலமான அணியாக இருந்தாலும் பேட்டிங்கில் பலவீனமான அணியாக இருக்கிறது.
இதனால் முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராகவும் மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் தோல்வியை தழுவியது. எனவே நாளை நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரும், தற்போதைய சிஎஸ்கே வீரருமான பத்திரனா மகேந்திர சிங் தோனி உடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “மகேந்திர சிங் தோனி எனக்கு தந்தை போன்றவர். ஏனென்றால் கிரிக்கெட்டில் அவர்தான் சிஎஸ்கே அணியில் என்னை கண்டெடுத்து வழி நடத்துகிறார். என்னுடைய தந்தை வீட்டில் என்னை எப்படி பார்த்துக் கொள்கிறாரோ அதேபோலத்தான் தோனியும் என்னை பார்த்துக் கொள்கிறார். இதனால் நான் தோனியை என்னுடைய கிரிக்கெட்டின் தந்தை என்று அழைப்பேன். எம்எஸ் தோனி என்னை முதலில் பார்த்தபோது மாலி என்று அழைத்தார்.
இதையும் படிங்க:நாளை டெல்லி மேட்ச்.. 2 வீரர்கள் அதிரடி மாற்றம்.. அனல் பறக்கும் சிஎஸ்கே பிளேயிங் லெவன்.. இந்த அணி கண்டிப்பா வெல்லும்
நான் பந்து வீசும் ஸ்டைலை பார்த்து என்னை அனைவரும் பேபி மலிங்கா, லிட்டில் மலிங்கா என்று கூறுவார்கள். ஆனால் தோனி என்னை மாலி என்று சிங்களத்தில் அழைத்தார். சிங்களத்தில் மாலி என்றால் தம்பி என்று அர்த்தம். எனவே பெரிய ஜாம்பவான் வீரராகிய தோனி தன்னைத்தம்பி என்று அழைத்தது எனக்கு பெருமையை ஏற்படுத்தியது. எனவே சிஎஸ்கே அணியில் என்னுடைய பயணம் சிறப்பாக இருக்கும் என்று எனக்கு அப்போதே தோன்றியது” என்று கூறியிருக்கிறார்

