நாளை டெல்லி மேட்ச்.. 2 வீரர்கள் அதிரடி மாற்றம்.. அனல் பறக்கும் சிஎஸ்கே பிளேயிங் லெவன்.. இந்த அணி கண்டிப்பா வெல்லும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. நாளைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் எத்தகைய பிளேயிங் லெவனை அமைத்தால் சிஎஸ்கே வலிமையான அணியாக மாறும் என்று பார்க்கலாம்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இதே சொந்த மண்ணில் பெங்களூர் அணிக்கு எதிராக தோல்வியை தழுவிய சிஎஸ்கே அதற்கு அடுத்த கவுகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் தான் தகுந்த போட்டியை எதிர் அணிகளுக்கு வழங்க முடியும்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தொடக்க வீரர் ராகுல் திருப்பாதி கடந்த மூன்று போட்டிகளாக மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். மற்ற அணிகளில் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் தொடக்க வரிசையில் வரும் போது அதிரடி வீரர்கள் இல்லாத சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவாக உள்ளது. எனவே அவரிடத்திற்கு சென்னை அணிக்காக முன்னர் விளையாடிய டெவான் கான்வே மீண்டும் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

எனவே அவர் வருவதன் மூலமாக சிஎஸ்கே வலிமையான தொடக்கத்தை பெற முடியும். அதே சூழலில் பவர் பிளேவில் கலீல் அகமது சிறப்பாக பந்து வீசி வரும் நிலையில், அவருக்கு சப்போர்ட் செய்து வீசக்கூடிய அளவுக்கு மற்றொரு பந்து வீச்சாளர் இல்லை. எனவே பவர் பிளேவில் வீசுவதற்கு அன்சூல் கம்போஜ் பிளேயிங் லெவனில் கொண்டுவரப்பட வேண்டும். அவர் உள்ளே வரும் பட்சத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பவர் பிளேவுக்கு அடுத்த ஓவர்கள் வீசும் படி செட் செய்யலாம். ஏனென்றால் ரவிச்சந்திரன் அஸ்வின் பவர் பிளேவில் அதிக ரன்களை வாரி வழங்குகிறார். அவரைப் பவர் பிளேவிற்கு அடுத்த ஓவர்கள் வீச வைப்பதன் மூலமாக அதனை தடுக்க முடியும். இதன் மூலமாக சிஎஸ்கே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளும் வலுவடைந்து வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க:23.75 கோடிகள் வாங்குகிறேன் என்பதால் எல்லா போட்டிகளும் ரன்கள் குவிக்கனுமா ? என்ன அநியாயம் இது – வெங்கடேஷ் ஐயர் பேச்சு

டெல்லி அணிக்கு எதிராக விளையாட உள்ள சிஎஸ்கே உத்தேச பிளேயிங் லெவன் :கான்வே, ரச்சின் ரவீந்தரா, ருதுராஜ், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், அன்சூல் காம்போல், நூர் அகமத், கலில் அகமத் இம்பாக்ட் பிளேயர் ஆக பத்திரனா

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles