சிஎஸ்கே-க்கு புது தலைவலி.. குறைந்தது 8 வாரங்கள் ரூல்ட் அவுட்.. நட்சத்திர வீரருக்கு அறுவை சிகிச்சை

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் அறுவை சிகிச்சைக்காக எட்டு வாரங்கள் ஓய்வு எடுப்பது சென்னை அணிக்குப் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

17 வது ஐபிஎல் சீசன் வரும் 22ஆம் தேதி சென்னையில் வெற்றிகரமாகத் தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. வலிமை வாய்ந்த இரு அணிகள் மோதும் முதல் போட்டி என்பதால் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே வெகுவாக அதிகரித்துள்ளது.

- Advertisement -

விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனியைக் காண இரு அணி ரசிகர்களும் மிகுந்த ஆவலில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றதை அடுத்து ஐபிஎல்லில் புதிய உத்வேகத்துடன் களமிறங்க உள்ளார். மகேந்திர சிங் தோனியும் இன்று சென்னை வந்து இறங்கி தனது அணியினருடன் இணைகிறார் என்பது கூடுதல் செய்தி.

- Advertisement -

சென்னை மற்றும் பெங்களூர் அணியின் பேட்டிங் வரிசை என்பது மிகவும் வலுவான ஒன்று. அதிலும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் முதல் ஏழாவது வரிசை ஆட்டக்காரர் வரை அனைவருமே அதிரடி மற்றும் நிதானத்திற்கு பெயர் போனவர்கள். அணியின் சூழ்நிலை மற்றும் ரன்ரேட் இவற்றை கருத்தில் கொண்டு சென்னை அணி வீரர்கள் விளையாடுவதால் ஒவ்வொரு சீசனிலும் அவர்கள் வெற்றிகரமான அணியாகத் திகழ்கிறார்கள்.

இந்நிலையில் சென்னை அணிக்கு புதிய சிக்கலாகத் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான கான்வே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரின் போது வலது கட்டைவிரல் பகுதியில் காயமடைந்தார். பின்னர் அவரை பரிசோதித்த டாக்டர்கள் காயம் பெரிதாக இல்லை விரைவில் குணமடைந்து விடுவார் என்று தெரிவித்தனர்.

- Advertisement -

பின்னர் ஸ்கேன் செய்து பார்க்கையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக நியூசிலாந்து அணி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து அவர் காயத்தில் இருந்து குணமாக எட்டு வாரங்கள் வரை ஆகலாம் என்று தெரிகிறது.

இதனால் ஐபிஎல் தொடரின் பாதி வரை வெளியேற வேண்டிய சூழ்நிலை கான்வேவுக்கு ஏற்பட்டுள்ளது. இது சென்னை அணிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடக்க ஆட்டக்காரராக யாரைக் களம் இறக்குவது என்பது குறித்து தற்போது ஆலோசனை செய்து வருகிறது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திராவைக் களமிறக்கவது சரியான முடிவாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles