சிவம் தூபே முன்னாடியே இறங்காததற்கு காரணம் இதுதான்.. எங்க தோல்விக்கும் இதுதான் முக்கிய காரணம்.. சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் பேட்டி

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சென்னை அணியை வீழ்த்தியது. சென்னை அணி தோல்வி அடைந்ததற்கான காரணத்தை கூறியிருக்கிறார் கேப்டன் ருத்ராஜ்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதனுடைய சொந்த மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் குவித்தும் தோல்வியை தழுவியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ருத்ராஜ் 60 பந்துகளில் 108 ரன்களும், சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓரளவு வலுவான பந்துவீச்சை கொண்டிருப்பதால் இந்த போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற்று விடும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்குத் தகுந்தவாறே 33 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்களையும் இழந்தது. பின்னர் மிடில் ஆர்டர் வரிசையில் பூரான் 15 பந்துகள் 34 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

மற்றொரு முனையில் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்டானிஸ் 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டார். எனவே இந்த தோல்வி குறித்து கேப்டன் ருத்ராஜ் பனிப்பொழிவுதான் ஆட்டத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது
“இது விழுங்குவதற்கு கடினமான மாத்திரையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் கிரிக்கெட்டை பொருத்தவரை இது ஒரு நல்ல போட்டி. 14 ஓவர்கள் வரை ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. ஸ்டானிஸ் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடிவிட்டார். இன்றைய போட்டியில் பனியின் பங்கு முக்கிய காரணமாக அமைந்தது. இது எங்கள் அணியின் ஸ்பின்னர்களுக்கு கடினமாக அமைந்தது.

- Advertisement -

பணி இல்லாமல் இருந்திருந்தால் ஆட்டத்தை நன்றாக எடுத்துச் சென்று இருக்க முடியும். ஆனால் இது எல்லாம் நம் கையில் எதுவும் கிடையாது. இது ஆட்டத்தின் ஒரு பகுதியாகும். பவர் பிளேவில் இரண்டு விக்கெட் விழுந்ததே ஜடேஜா பேட்டிங் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம். ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தால் சிவம் தூபே இறங்கி இருப்பார். ஆனால் அவருக்காக யாரையும் அவுட் ஆகச் சொல்லி கட்டாயப்படுத்துவது தவறு.

இதையும் படிங்க:ஸ்டாய்னிஸ் சரவெடி ஆட்டம்.. 63 பந்து 124 ரன்.. ருத்ராஜ் சதம் வீண்.. புள்ளி பட்டியலில் சிஎஸ்கே பின்னடைவு

உண்மையைச் சொல்வது என்றால் நாங்கள் இந்த ஆடுகளத்தில் அடித்த ரன்கள் குறைவு. ஏனென்றால் இங்கு இரவு நாங்கள் பயிற்சி செய்த போது பெரிய அளவில் பனியிருந்தது. ஆனாலும் லக்னோ அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது” என்று கூறியிருக்கிறார். இந்த தோல்வியின் மூலம் நான்காவது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி தற்போது ஐந்தாவது இடத்திற்கு கிளை இறங்கி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles