ஸ்டாய்னிஸ் சரவெடி ஆட்டம்.. 63 பந்து 124 ரன்.. ருத்ராஜ் சதம் வீண்.. புள்ளி பட்டியலில் சிஎஸ்கே பின்னடைவு

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த லக்னோ அணி முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ரகானே விரைவிலேயே ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ருத்ராஜ் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

இதற்கு இடையே டாரி மிச்சல் 11 ரன்களும், ரவீந்திர ஜடேஜா பதினாறு ரன்களும் குவித்தனர். அதற்குப் பிறகு களம் இறங்கிய சிவம் துபே லக்னோ அணியின் பந்துவீச்சாளர்களை நாலா புறமும் சிதறடித்தார். 27 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் மூன்று பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் என 66 ரன்கள் விலாசினார். இந்த நிலையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் தரமான இன்னிங்சை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

60 பந்துகளை எதிர்கொண்ட அவர் 12 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 108 ரன்களை விளாசி சிஎஸ்கே அணியின் ரன்கள் உயர முக்கிய காரணமாக இருந்தார். பின்னர் இறுதியாக களம் இறங்கிய மகேந்திர சிங் தோனி கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 210 குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி லக்னோ அணி களம் இறங்கியது.

லக்னோ அணியில் டிகாக் ரன்கள் ஏதுமின்றி டக் அவுட் ஆகி வெளியேறினார். மறுமுனையில் கேப்டன் கே எல் ராகுல் 14 பந்துகளில் 16 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். அதற்குப் பிறகு ஒன் டவுனில் களம் இறங்கிய மார்க்கஸ் ஸ்டானிஸ் ஒரு முனையில் நிலைத்து நின்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். இவருக்கு பக்கபலமாக நிக்கோலஸ் பூரன் 15 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் என 34 ரன்கள் குவித்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

- Advertisement -

மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டானிஸ் 63 பந்துகளில் 13 பவுண்டரிகள், ஆறு சிக்ஸர்கள் என 124 ரன்கள் குவித்து லக்னோ அணியை அபார வெற்றி பெற வைத்தார். மறுமுனையில் தீபக் ஹூடா ஆறு பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்சர் என 17 ரன்கள் விளாசினார்.

இதையும் படிங்க:சேப்பாக்கத்தில் ஆர்ப்பரித்த ஆறுச்சாமி.. கேப்டன் ருத்ராஜ் தரமான கிளாஸ் ஆட்டம்.. பௌண்டரியுடன் முடித்த தல தோனி

இதனால் இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 19.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து மூன்று பந்துகள் மீதும் வைத்து 213 ரன்கள் குவித்து அபாரமான வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் மூலம் லக்னோ அணிக்கு இது ஐந்தாவது வெற்றியாக அமைந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது நான்காவது தோல்வி ஆகும். இதன் மூலம் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு கீழே இறங்கி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles