30 வருஷம் சின்னப்பையன் வைபவ் சூர்யவன்ஷி.. எனக்கு வயதாகிவிட்டது போல பாஸ்.. தோனி உற்சாகம்

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டிக்கு பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேசும் போது, இந்த வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் அதிகளவில் வரவில்லை என்றாலும், நன்றாக ஆதரவு இருந்தது. ஏனென்றால் இது பெரிய மைதானம்.

- Advertisement -

இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக அமையவில்லை. ஆனால் வெற்றியுடன் நிறைவு செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பவுலர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. அதேபோல் பேட்டிங்கும் அற்புதமாக அமைந்தது. ஃபீல்டிங் மோசமாக இருந்த போது, இந்த ஆட்டத்தில் சரி செய்து இருக்கிறோம்.

- Advertisement -

தோனி பேச்சு

அடுத்த சீசனில் ஆடுவேனா என்பதை முடிவு செய்ய 4 முதல் 5 மாதங்கள் உள்ளது. அவசர அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டிய தேவையில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஃபிட்னஸ் உடன் உடலை வைத்து கொள்வது சிரமமாக உள்ளது. டாப் லெவல் கிரிக்கெட் விளையாடும் போது, நாம் ஃபிட்னஸொல் சிறப்பாக இருக்க வேண்டும்.

- Advertisement -

அதேபோல் தொழில்முறை கிரிக்கெட்டில் நமது செயல்பாடுகளை பெரிதாக கணக்கில் கொள்ள கூடாது. நமது செயல்பாடுகள் சரியில்லை என்று ஓய்வு பெறத் தொடங்கினால், சிலர் 22 வயதிலேயே ஓய்வை அறிவித்துவிடுவார்கள். வெற்றிக்கான பசியுடன் இருக்கிறீர்களா, நல்ல உடல் வலிமையுடன் இருக்கிறீர்களா என்பதே முக்கியம். அணிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

அதேபோல் சிஎஸ்கே அணிக்கு நான் தேவையா இல்லையா என்பதை முடிவு செய்ய நேரம் உள்ளது. அடுத்ததாக ராஞ்சிக்கு சென்று, ஓய்வு எடுக்க வேண்டும். வீட்டிற்கு சென்று சில காலம் ஆகிவிட்டது. கொஞ்சம் சொகுசாக பைக் ஓட்டிவிட்டு முடிவினை எடுக்கலாம். நான் ஓய்வு பெற்றுவிட்டேன் என்று சொல்ல மாட்டேன். அதேபோல் கம்பேக் கொடுப்பேன் என்றும் சொல்ல போவதில்லை. எனக்கு முடிவு எடுக்க காலம் உள்ளது.

- Advertisement -

வயதாகிவிட்டதா?

அதனால் நன்றாக சிந்தித்து முடிவு எடுப்பேன். இந்த சீசனில் முதல் 4 போட்டிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்தது. அந்த 6 போட்டிகளில் பனிப்பொழிவு காரணமாக 2வது பேட்டிங்கை தேர்வு செய்தோம். ஆனால் முதல் இன்னிங்ஸின் போது பிட்ச் பேட்டிங் செய்வதற்கானது என்று புரிந்து கொண்டேன். இதனால் 2வது பேட்டிங்கின் போது அழுத்தத்துடன் விளையாட வேண்டியதாக இருந்தது.

பேட்ஸ்மேன்களிடம் நம்பிக்கை இல்லாமல் சென்றது. பேட்டிங்கை நினைத்து கவலை கொள்ள தொடங்கிவிட்டேன். ஏனென்றால் பேட்ஸ்மேன்கள் ஸ்கோரை அடித்தால் தான் டிஃபெண்ட் செய்ய முடியும். யாரும் பங்களிப்பு செய்யவில்லை. அதேபோல் ரன்களை குவித்தாலும், சில ஓட்டைகளை அடைக்க வேண்டிய தேவையும் இருந்தது. குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த சீசனுக்கு வரும் போது, அதிகமான கவலைகள் இருந்துவிடக் கூடாது.

வைபவ் சூர்யவன்ஷி போன்ற ஒருவர் காலில் விழும்போது, கொஞ்சம் வயதாகிவிட்டதாக தோன்றும். ஆனால் சிஎஸ்கே அணியில் ஆண்ட்ரே சித்தார்த் இருக்கிறார். வழக்கமாக ஓய்வறையில் கடைசி இடத்தில் அமர்வேன். என் அருகில் அவர் அமர்ந்திருப்பார். அவருடன் பேசும் போது, உன் வயது என்ன என்று கேட்டேன். அவர் என்னைவிட 25 வயது இளையவர். அப்போது எனக்கு வயதாகிவிட்டதாக தோன்றும் என்று கூறியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles