கான்வே 152* ரவீந்தரா 123*.. 36.2 ஓவர்களில் இங்கிலாந்தை மூட்டை கட்டிய நியூசிலாந்து.. 2023 WC அதிரடி தொடக்கம்.!

13 வது உலகக் கோப்பை போட்டிகள் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த வருடத்திற்கான உலகக்கோப்பை யின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி மற்றும் கடந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி இடம் போராடி தோல்வி அடைந்த நியூசிலாந்து அணிகளும் மோதின.

- Advertisement -

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக ரன்களை குறிக்கும் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் மலான் 14 ரன்களிலும் ஜானி பேர்ஸ்டோவ் 33 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

இவர்களைத் தொடர்ந்து களம் இறங்கிய ஹாரி ப்ரூக்ஸ் 25 ரன்களிலும் மொயின் அலி 11 ரன்களிலும் ஆட்டம் இழக்க 118 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி அந்த அணியின் ஜோ ரூட் மற்றும் கேப்டன் பட்லர் இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் ஐந்தாவது விக்கெட் இருக்கு ஜோடியாக 70 ரன்களை சேர்க்க சரிவிலிருந்து ஓரளவு மீண்டது இங்கிலாந்து. 300 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர் 43 ரன்களில் ஆட்டம் இழந்தார். பட்லரைத் தொடர்ந்து லிவிங்ஸ்டண் 20, சாம் கரன் 14 மற்றும் ஓக்ஸ் 14 ரண்களில் வெளியேறினர்.

- Advertisement -

அந்த அணியின் ஜோ ரூட் மட்டும் சிறப்பாக விளையாடி 86 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். ஜோ ரூட் ஆட்டம் இழந்த பிறகு மார்க் வுட் 13 ரண்களும் ஆதில் ரசீத் 15 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 282 ரண்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார் சாம் கரன். நியூசிலாந்து அணியின் வீரர் வில் யங் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

அவருக்குப் பிறகு ஜோடி சேர்ந்த கான்வே மற்றும் ரவீந்திர இருவரும் அதிரடியாக விளையாடி போட்டியை நியூசிலாந்து அணியின் பக்கம் மொத்தமாக திருப்பினர். இவர்கள் இருவரது விக்கெட்டையும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் வீழ்த்தவே முடியவில்லை. ஒரு முனையில் கான்வே பௌண்டரிகளாக விலாச மறுமுனையில் ரவீந்தரா சிக்ஸர்களாக அடித்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை ஓடவிட்டனர் . அதிரடியாக விளையாடிய கான்வே இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

இவரைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டரான ரவீந்தராவும் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இவர்கள் இருவரது அனல் பறக்கும் ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 36.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய டெவோன் கான்வே 121 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் 19 பௌண்டரிகளுடன் 152 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவருடன் அதிரடியாக விளையாடிய ரவீந்தரா 96 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகளுடன் 123 ரன்கள் எடுத்து நாட்ட அவுட் ஆக போட்டியை முடித்து வைத்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்க்கு 273 ரன்கள் சேர்த்தனர். இது உலகக்கோப்பையில் இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு எடுக்கப்பட்ட நான்காவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு கிறிஸ் கெயில் மற்றும் மார்லன் சாமுவேல்ஸ் எடுத்த 372 ரன்கள் உலகக் கோப்பையில் இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் எடுக்கப்பட்ட அதிகபட்ச பாத்திரங்கள் ஆகும். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியாவின் சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஜோடி 318 ரன்கள் சேர்த்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles