நம்பி ஓவர் கொடுத்த ருத்ராஜ்.. சொல்லி அடித்த கில்லி.. தொடக்க ஜோடிக்கு செக் வைத்த துஷார் தேஷ் பாண்டே

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஜோடியை சிஎஸ்கே பவுலர் சிறப்பாக ஃபீல்ட் செட் செய்து அவுட் ஆக்கியிருக்கிறார்.

- Advertisement -

இன்று ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி பேட்டிங்கை சென்னை அணி தொடங்கியது.

- Advertisement -

முதல் விக்கெட்டுக்கு இறங்கிய அணியின் கேப்டன் ருத்ராஜ் மற்றும் ரஹானே ஜோடி 19 ரன்கள் குவித்த நிலையில் தனது முதல் விக்கெட்டை பறி கொடுத்தது. ரகனே 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பின்னர் ஒன் டவுனில் களமிறங்கிய டாரி மிச்சல் இந்த முறை சிறப்பாக விளையாடி அரை சதத்தினை அடித்தார்.

- Advertisement -

52 ரன்கள் குவித்த நிலையில் டாரி மிச்சல் அவுட் ஆகி வெளியேற, அதன் பிறகு களமிறங்கிய சிவம் தூபே 20 பந்துகளில் ஒரு பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் என 39 ரன்கள் குவித்தார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய அணியின் கேப்டன் ருத்ராஜ் சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் 10 பவுண்டரி மூன்று சிக்ஸர்களை விளாசி 98 ரன்கள் குவித்தார்.

இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி களம் இறங்கி விளையாடியது. முதல் ஓவரை மொயின் அலியை வைத்து ஆரம்பிக்கப்படும் என்று அனைவரும் எண்ணிய நிலையில் தீபக்சகார் முதல் ஓரை வீசினார்.

- Advertisement -

தீபக்சகர் வீசிய ஓவரில் ஏழு ரன்கள் செல்ல, இரண்டாவது ஓவரை துசார்தேஷ் பாண்டே வீசினார். அதனை எதிர்கொண்ட அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் முதல் பந்தை சிக்சருக்கு விளாச, இரண்டாவது பந்தை சிங்கிள் எடுத்து அபிஷேக் ஷர்மாவிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார். மூன்றாவது பந்தை அபிஷேக் சர்மாவும் சிக்ஸர் விளாச, ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் துஷார் தேஷ் பாண்டே ஆப் சைடில் ஸ்லோயர் ஒன் ஆக வீசிய பந்தை அடிக்கப் போய் ஆப்சைட் லாங்கர் திசையில் நின்றிருந்த டாரி மிச்சலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையும் படிங்க:வில் ஜாக்ஸ் பிரஷர்ல இருந்தப்போ இதைத்தான் கூறினேன்.. அதுக்கப்புறம்தான் வெடித்து சிதறினார்.. வெற்றிக்கு பின்னர் விராட் கோலி பேட்டி

பின்னர் நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவுக்கும் இதே வகையான பந்தை வீச அவரும் அடிக்கப் போய் லாங்கர் திசையில் ஆப் சைடில் நின்று கொண்டிருந்த மிச்சலிடம் திரும்பவும் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சன்ரைசர்ஸ் அணியின் இரண்டு அபாயகரமான இந்த பேட்ஸ்மேன்களை நம்பி ஓவர் கொடுத்த அணியின் கேப்டன் ருத்ராஜை ஏமாற்றாமல் சிறப்பாக பீல்டிங் செட் செய்து இரண்டு விக்கெட்டுகளை துஷார் தேஷ் பாண்டே கைப்பற்றி கொடுத்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles