தோனிக்கு இப்படியா நடக்கணும்.? இதயமே நொறுங்கிய மொமென்ட்.. உடைந்து போன ரசிகர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் தற்போது விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் தோனிக்காக எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய சம்பவம் நடந்துள்ளது.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 53வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் அணியின் சொந்த மைதானமான தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதற்கு முந்தைய போட்டியில் இரண்டு அணிகளுமே மோதிய நிலையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று களம் இறங்கியது.

- Advertisement -

இந்த முறையும் டாஸ் இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ரகானே இந்த போட்டியில் அமர வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவரே இன்று தொடக்க ஆட்டக்காரராகவும் களமிறங்கினார். எதிர்பார்க்கப்பட்டது போலவே ரஹானே 9 ரன்களில் வெளியேறினார். அதற்குப் பிறகு தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் உடன் டேரி மிச்சல் களம் இறங்கினார்.

- Advertisement -

இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 32 பந்துகளில் 57 ரன்கள் குவித்தனர். 19 பந்துகளில் 30 ரன்கள் குவித்த நிலையில் டேரி மிச்சல் வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய சிவம் துபே கடந்த போட்டியில் ஆட்டம் இழந்தது போலவே இந்த முறையும் முதல் பந்தில் ராகுல் சகாரின் பந்துவீச்சில் வெளியேறினார்.

இதற்குப் பிறகு களம் இறங்கிய ரவீந்திர ஜடேஜா ஒரு முனையில் நிலைத்து நின்ற விளையாட, மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ருத்ராஜ் 21 பந்துகளில் 32 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். அதற்குப் பிறகு சான்ட்னர் 11 ரன்களிலும், தாகூர் 17 ரன்களிலும் வெளியேறினார்கள். ஆட்டத்தின் 19 ஆவது ஓவரின் நான்காவது பந்தில் ஹர்சல் பட்டேல் வீசிய ஓவரில் தாகூர் வெளியேற அதைத் தொடர்ந்து மகேந்திர சிங் தோனி களம் இறங்கினார்.

- Advertisement -

2010ஆம் ஆண்டு இதே தரம்சாலா மைதானத்தில் சென்னை அணிக்காக அபாரமாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் சென்னை அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்வார். அதேபோல இந்த முறையும் சில சிக்ஸர்களை அடித்து சென்னை அணியின் ரன்களை உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஹர்சல் பட்டேல் வீசிய முதல் பந்திலேயே கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

இதையும் படிங்க:டிராபியை வைத்து ஆர்சிபி ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த பார்த்திவ் பட்டேல்.. காரணம் என்ன?

முதல் பந்தை சிக்சர் அடிக்க போய் வீசப்பட்ட ஸ்லோயர் பந்தை சரியாக கனிக்கத் தவறிய தோனி அந்த பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதன் மூலம் சென்னை ரசிகர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் தகர்ந்தது. இதன் மூலம் இறுதியில் 20 ஓவர்களில் சென்னை அணி 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் அணி தற்போது விளையாடி வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles