CSK vs GT: நாளை சிஎஸ்கேவின் உத்தேச பிளேயிங் XI.. ஷர்துல் கம்பேக்.. பதிரானாவுக்கு வாய்ப்பு இருக்கா.?

17-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டு சிறப்பான வெற்றியை பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் வருகிற 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளிலுமே பழைய கேப்டன்கள் பெண்கள் மாறி தற்போது புது கேப்டன்கள் அணியை வழி நடத்த உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டன் ஆகவும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கில் கேப்டன் ஆகவும் செயல்பட இருப்பது அனைவரும் அறிந்ததே.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணியும் தற்போது பலமான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி புதிய உத்வேகத்துடன் களமிறங்க உள்ளது. இரு அணிகளுமே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இரண்டாவது போட்டியில் பிளேயிங் லெவனை மாற்றுவதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் குறைவு தான். சென்னை அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ருத்ராஜ் மற்றும் ரட்சின் ரவீந்திரா ஆகியோர் நன்றாக செட்டில் ஆகிவிட்டனர்.

- Advertisement -

மூன்றாவது இடத்தில் அனுபவ வீரரான ரகானே சென்னை அணிக்கு மிகச் சிறப்பாக பங்களித்துக் கொண்டிருக்கிறார். முதல் போட்டியில் நன்றாக செயல்பட்ட அவர், கிட்டத்தட்ட இந்த சீசன் முழுவதும் அவரை விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் மிடில் ஆர்டரை பொருத்தவரை டாரி மிச்சல் இருக்கிறார். முதல் போட்டியில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட அவர் அடுத்தடுத்து போட்டிகளில் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

அதன் பிறகு ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் சமீர் ரிஸ்வி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள். பந்துவீச்சு ஃபீல்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட கூடிய ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கிலும் பங்களிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். ஆல் ரவுண்டரான இளம் இந்திய வீரர் சமீர் ரிஸ்வி முதல் போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அடுத்த போட்டியில் அவர் விளையாடுவார்.

- Advertisement -

மேலும் பந்துவீச்சை பொறுத்தவரை முஸ்தபிர் ரஹ்மான், தீக்ஷானா, தீபக்சகர் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள். கடந்த போட்டியில் பந்துவீச்சில் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் அதிக ரன்கள் கொடுத்த துஷார் தேஷ்பாண்டேவுக்கு பதிலாக சர்துல் தாகூர் அடுத்த போட்டியில் இம்பாக்ட் பிளேயர் ஆக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் முஸ்தபிகுர் ரஹ்மான் சிறப்பாக பந்துவீசி இருப்பதால் காயத்திலிருந்து மீண்டு வந்த பத்திரானா ஆடும் லெவனில் இடம்பெறுவது சந்தேகம்தான். எனவே இரு அணிகளுமே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் அடுத்த போட்டியில் முழு உத்வேகத்துடன் களமிறங்கும்.

எனவே குஜராத் அணிக்கு எதிரான சென்னை அணியின் உத்தேச லெவன் :

ருத்ராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரகானே, டாரி மிச்சல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி எம் எஸ் தோனி, தீபக்சஹார், தீக்ஷானா, முஸ்தபிக்குர் ரஹ்மான், சர்துல் தாக்கூர் இம்பாக்ட் பிளேயர்- சிவம் துபே

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles