தோல்வியிலும் இத நினைச்சா சந்தோசமா இருக்கு.. சில தவறுகள் பண்ணிட்டோம்.. தோல்விக்குப் பிறகு ருத்ராஜ் பேட்டி

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் செய்த சில தவறுகளே தோல்விக்கு காரணம் என்று கூறி இருக்கிறார் சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ்.

- Advertisement -

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி பவர் பிளேவின் பாதியில் தனது அதிரடியைக் காட்ட ஆரம்பித்தது. முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் குவித்த நிலையில், இந்த தொடக்க ஜோடி பிரிந்தது. சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 52 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதன் பிறகு அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்(51), மற்றும் தொடக்க ஆட்டக்காரர் பிரத்விஷா(43) தங்களது பங்குக்கு அதிரடியாக விளையாடினர். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 192 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு அதன் பேட்டிங்கை பொறுத்த வரையில் எளிதான இலக்கு அதனால் வெற்றி பெற்று விடும் என்று ரசிகர்கள் நம்பினார். ஆனால் தொடக்கத்தில் ஏழு ரன்களுக்கு சென்னை அணி தங்கள் முதல் இரண்டு விக்கெட்டுகளை பறி கொடுத்தது. கடந்த இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா இந்த போட்டியில் 12 பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

கேப்டன் ருத்ராஜ் ஒரு ரன்னில் வெளியேற, அனுபவ வீரர் ரகானே மட்டும் 45 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார். டாரி மிச்சல் 34 ரன்கள் குவிக்க, பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மகேந்திர சிங் தோனி 16 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 37 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இருப்பினும் சென்னை அணி தொடக்கத்தில் பந்துகளை வீணடித்ததால், அந்த அணியால் 20 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் சென்னை அணியின் தோல்விக்கான காரணம் குறித்து கூறிய அணியின் கேப்டன் ருத்ராஜ் கூறும்பொழுது
“எங்கள் பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் ஆறு ஓவர்களில் ரன்களை அதிகமாக விட்டுக் கொடுத்தனர். அதற்குப் பிறகு கட்டுக்கோப்பாக வீசியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

- Advertisement -

அவர்களை 190 ரன்களில் கட்டுப்படுத்தியது நல்ல முயற்சி. முதலில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது.பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளத்தில் சிம் மூவ்மெண்ட் மற்றும் பவுன்சர் அதிகமாக இருந்ததால் ரச்சின் ரவீந்திராவால் பந்தை சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை. இதனால் பேட்டிங்கில் எங்களால் சரியான பங்களிப்பை வெளிப்படுத்த முடியவில்லை.

இதையும் படிங்க :அவரு கடுமையாக உழைக்கிறாரு.. வாய்ப்பு தரணும்னு நினைச்சோம்.. வெற்றிக்குப் பின் ரிஷப் பண்ட் பேட்டி

இதனால் இந்த போட்டியில் பின்தங்கியே இருந்தோம். பவர் பிளேவின் தொடக்கத்தில் நன்றாக பந்து வீசினோம். ஆனால் இறுதியில் அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். ஏற்கனவே இரண்டு வெற்றிகளை பெற்றிருக்கிறோம். இந்த தோல்வி பரவாயில்லை. அடுத்த போட்டியில் நிச்சயமாக மீண்டும் வருவோம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles