சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அபாரமான வெற்றியை பதிவு செய்ததன் மூலமாக புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.
இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு சிஎஸ்கே பவுலர்களின் அபாரமான பந்துவீச்சால் 19 ஓவர்கள் முடிவில் 104 ரன்கள் மட்டுமே எடுத்து பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த வாரத்தில் சிஎஸ்கே பவுலர் முகேஷ் சௌதரியின் தாயார் இயற்கை எய்தினார். இருப்பினும் அந்த கடினமான சூழலில் இருந்து அணிக்காக தன் விளையாட வேண்டும் என்று முடிவெடுத்த முகேஷ் சௌதிரிக்கு இந்த வெற்றியை நாங்கள் அர்ப்பணிக்கிறோம் என்று சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “சமீபத்தில் எங்கள் பவுலர் முகேஷ் சௌத்ரியின் தாயார் இறந்துவிட்டார். இருப்பினும் அந்த கடினமான சூழ்நிலையில் இருந்து சிஎஸ்கே அணிக்காக அவர் இந்த போட்டியில் விளையாடினார். எனவே அவருக்காக இந்த போட்டியை நாங்கள் வெல்ல வேண்டும் என்று பேசிக்கொண்டோம். சொன்னது போலவே எங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று இரண்டுமே சிறப்பாக இருந்தது. எனவே இந்த வெற்றியை நாங்கள் அவருக்கு அர்ப்பணிக்கிறோம். நாளை மறுநாள் எங்களுக்கு மற்றொரு போட்டி இருப்பதால் இந்த வெற்றி மறந்து நாங்கள் அடுத்த வெற்றிக்கு தொடர்ந்து முன்னேற வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

